சின்னத்திரை நடிகை. தொகுப்பாளினி என பண்முக திறமை கொண்டவர் நடிகை சித்ரா. விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த இவர், கடந்த ஆண்டு இறுதியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சின்னத்திரையில் தனது சிறந்த நடிப்பாலும் குறும்புத்தனத்தாலும், ரசிகர்களை கவர்ந்த சித்ராவின் மரணம், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Advertisment
ஆனால் அவர் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்டதாவும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் பெற்றோர் புகாரின் அடிப்படையில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவர் நடித்து வந்த கதாப்பாத்திரத்தில் தற்போது காவிய அறிவுமணி நடித்து வருகிறார்.
சித்ரா இறந்து மாதங்கள் பல கடந்தாலும் ரசிகர்கள் நாள் தோறும் அவர் குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனா. அந்த வகையில், கடந்த வருடன் அன்னையர் தினத்தன்று சித்ரா கோவிலுக்கு சென்று அம்மாவுக்காகவும் அப்பாவுக்காகவும் ஒரு ஸ்பெஷல் பூஜை செய்திருந்தார். அந்த வீடியோவை இந்த வருடம் அன்னையர் தினத்துக்காக சித்ராவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கின்றனர்.
Advertisment
Advertisement
இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வரும் நிலையில், சித்ரா பற்றி ரசிகர்கள் மிகவும் எமோஷ்னலாக பேசிய கண்ணீர் பதிவுகளை பதிவிட்டு வரும் நிலையில், இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil