2-வது ஐஸ்வர்யாவுடன் ரிலேஷன்ஷிப் மெயின்டெய்ன் செய்யும் கண்ணன்: 'நீங்க லவ் பண்றீங்களா?'
Tamil Serial Update : சீரியலில் நடிக்கும் போதே சரவண விக்ரமுடன் நன்றாக பழகி வந்த தீபிகா சீரியில் இருந்து நீக்கப்பட்டாரும், அவருடனான நட்பபை தொடர்ந்து வருகிறார்.
Tamil Serial Update : சீரியலில் நடிக்கும் போதே சரவண விக்ரமுடன் நன்றாக பழகி வந்த தீபிகா சீரியில் இருந்து நீக்கப்பட்டாரும், அவருடனான நட்பபை தொடர்ந்து வருகிறார்.
Serial Actress Deepika And Saravana Vickram Viral Photo : விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனால் சீரியல் நட்சத்திரங்கள் ஒரு சிறிய பதிவை வெளியிட்டாலும் அது பெரிய அளவில் வைரலாகி வருவது தொடர்ந்து வருகிறது.
Advertisment
மேலும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. 4 சகோதரர்கள் உள்ள குடும்பத்தின் ஒற்றுமையை முக்கிய கருவாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைசி வாரிசு கண்ணனாக நடித்து வருபவர் சரவண விக்ரம். சீரியலில் சாதாராண நடிகராக ரசிகர்களுக்கு தெரிந்த இவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் லக்ஷ்மி அம்மா இறந்த உடன் ரியலாக மொட்டை அடித்தில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.
இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் விஜே தீபிகா. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் அதிரடியாக சீரியலில் இருந்து நீக்கப்பட்டார். மேக்கப் போடுவதால் முகத்தில் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக இவர் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. சீரியலில் நடிக்கும் போதே சரவண விக்ரமுடன் நன்றாக பழகி வந்த தீபிகா சீரியலில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், அவருடனான நட்பபை தொடர்ந்து வருகிறார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் கோவை ஈஷா யோகா சென்னை புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தீபிகா. இந்த புகைப்படத்தில் ரசிகர்கள் லைக்ஸ் கொடுத்து வந்தாலும், ஒருசிலர் நீங்கள் இருவரும் லவ் பண்றீங்களா என்று பல கேள்விகளை கேட்டு வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil