Advertisment

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா மாற்றம்... மேக்கப் பிரச்னைதான் காரணமாம்!

Tamil Serial Update : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரயலில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து விஜே தீபிகா விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
Sep 15, 2021 10:01 IST
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா மாற்றம்... மேக்கப் பிரச்னைதான் காரணமாம்!

Pandian Stores VJ Deepika Update : விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இன்றைய காலகட்டத்திற்கு தேவையான குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் கடைசி மகன் கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வந்த விஜே தீபிகா திடீரென சீரியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது இவருக்கு பதிலாக வைஷாலி தனிகா நடித்து வருகிறார்.

Advertisment

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஐஸ்வர்யா கேரக்டரை மாற்றியது ஏன் என்பது குறித்து ரசிகர்கள மத்தியில் பரவலாக கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து விஜே தீபிகா தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய அவர், எனக்கு முகப்பரு பிரச்சனை இருந்ததால், சிகிச்சை பெற்று வந்தேன். இந்த பிரச்சனையை சரி செய்ய எனக்கு நேரமும் கொடுத்தார்கள். ஆனால், கடந்த மூன்று மாதங்களாக ஆகியும் எனக்கு இந்த பிரச்சனை தீரவில்லை.

ஆனாலும் என்னை ஊக்கப்படுத்தி நடிக்க வைத்தனர். அப்போது மேக்கப் போட போட முகப்பரு இன்னும் அதிகமாகத்தான் வந்தது என்று கூறினார். இருந்தாலும் நான் சீரியலில் நடித்து வநதேன். ஆனால் அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்கு என்னை அழைக்கவில்லை. இதனால் எனக்கு சந்தேகம் வந்தது. அப்போது மேனேஜர் கால் செய்து நான் நீக்கப்பட்டதை குறித்து தெரிவித்தார். ஆனால் எனது பிரச்சனையை சரி செய்ய நேரம் கொடுத்தும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதால், நான் நீக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Vj Deepika #Pandian Stores Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment