சின்னத்தரையில் ஒன்றான நடித்து வரும் நட்சத்திரங்கள் காதலித்து திமணம் செய்துகொள்ளும் நிகழ்வு தொடர்ந்து வரும் நிலையில், இந்த வரிசையில் புது ஜோடி ஒன்று இணைந்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அழகு சீரியலில், பூர்ணா என்ற வில்லி கேரக்டரில் நடித்திருந்தவர் வி.ஜே.சங்கீதா. நடிகை ரேவதி, தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த சீரியலில், ஸ்ருதிராஜ் நாயகியாக நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த சீரியல், வி.ஜே.சங்கீதாவுக்கு பெரிய பாராட்டுக்களை பெற்று தந்தது.
இந்த சீரியல் கடந்த 2020-ம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில், அடுத்து விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் வி.ஜே.சங்கீதா நடித்து வந்த நிலையில், அடுத்து தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்திருந்தார். கனா காணும் காலங்கள் சீரியலில் இவர், மலர் என்ற டீச்சர் கேரக்டரில் நடித்திருந்த நிலையில், இந்த சீரியலில் மாணவராக நடித்த நடிகர், அரவிந்த செஷூ என்பவரை வி.ஜே.சங்கீதா திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இவர்கள் இருவரும் ரொமான்டிக்காக வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வி.ஜே.கல்யாணி மற்றும் நடிகை திவ்யா கணேஷ் ஆகியோர் சங்கீதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஜெய்பீம் படத்தில் சூர்யாவுடன் நடித்திருந்த அரவிந்த செஷூ அடுத்து விஜய் டிவியின் புதிய சீரியலான அய்யனார் துணை என்ற சீரியலில், சோழன் கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி துறையில் வேலை பார்த்து வந்த வி.ஜே.சங்கீதா, தனது தோழியின் மூலமாக சின்னத்திரையில் வி.ஜே.வாய்ப்பு தேடிய நிலையில், சில கட்ட முயற்சிகளுக்கு பிறகு வி.ஜே.வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐ.டி வேலைக்கு இடையில் வி.ஜே.வாக வேலை பார்த்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் ஐடி வேலையை உதறிய சங்கீதா முழு நேரமாக சின்னத்திரையில், கவனம் செலுத்திய நிலையில், அடுத்து சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“