/indian-express-tamil/media/media_files/dDeZqbb45cp8yqkXr0y6.jpg)
சந்தியா ராகம் சீரியல்
ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியலில் நடித்து வந்த நடிகை வி.ஜே தாரா திடீரென அந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில், இது குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று தனது விலகளுக்கான காரணம் குறித்து தெரிவிக்க மறுத்துள்ளார்.
முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்களை ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில், ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று சந்தியா ராகம். இந்தியில் வெளியான, சொப்னோ சுஹானி லடக்பென் கே என்ற சீரியலின் ரீமேக்காக தயாராகியுள்ள இந்த சீரியல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இரவு 7 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ராஜீவ் பரமேஷ்வர், சந்தியா ஜகர்லம்முடி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், தனலட்சுமி என்ற கேரக்டரில் வி.ஜே தாரா நடித்து வந்தார். ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, வி.ஜே தாரா திடீரென சீரியலில் இருந்து விலகுவதாகவும் அவருக்கு பதிலாக, பாவனா லஸ்யா தனலட்சுமி கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தனிப்பட்ட காரணங்களுக்காக வி.ஜே தாரா சீரியலில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படும் நிலையில், தனது விலகல் குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதில், ஹாய் மக்களே, எதிர்பாராத சூழலில் கனத்த இதயத்துடன் சந்தியா ராகம் சீரியலில் இருந்து விலகுகிறேன். நிச்சயமாக அதற்கான காரணம் என்ன என்று நான் வெளியிடப்போவதில்லை.
சேனலுக்கும் ஒட்டுமொத்த சந்தியாராகம் சீரியல் குழுவுக்கும், இத்தகைய நினைவுகளை கொடுத்ததற்கு நன்றி, புது ஹீரோயின் லஸ்யாவுக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு மூவ் ஆன என்ற ஹேஸ்டேக்குடன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தாராவின் ரசிகர்கள் பலரும் அவரை மிஸ் செய்வதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.