Advertisment

பாலி தீவில் பிறந்த நாள் கொண்டாட்டம் : எதிர்நீச்சல் நடிகை பர்த்டே க்ளிக்ஸ் வைரல்

எதிர்நீச்சல் ஜனனி இந்தோனேசியாவில் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Madhumitha Boli

எதிர்நீச்சல் ஜனனி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நடிகை மதுமிதா வெளிநாட்டில் தனது நண்பர்களுடன் இணைந்து தனது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

Advertisment

சன் டி.வியின் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மதுமிதா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவருக்குதமிழ் சின்னத்திரையில் அதிகப்படியான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் எதிர்நீச்சல் சீரியல் தான். இந்த சீரியல் நாள்தோறும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பையும் தொற்றிக்கொள்ளும் வகையில் உள்ளது.

இந்த சீரியல் மூலம் நடிகை மதுமிதா தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்துள்ள நிலையில்தனது சமூகவலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்று வருகிறார். அந்த வகையில் தற்போது தனது பிறந்த நாளை முன்னிட்டு, நண்பர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக, சில நாட்களுக்கு முன்பே அவர்களுடன் இணைந்து பாலி தீவுக்கு சென்றுள்ளார்.

தனது பிறந்த நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே, இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு, தனது நண்பர்களுடன் சென்ற மதுமிதா தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.  இவருடன்,  புதுவசந்தம் தொடரில் நடித்து வரும் நடிகை வைஷ்ணவியும் இணைந்துள்ளார். மேலும் அங்கு படகு சவாரி செய்வது போல் புகைப்படங்களை பகிர்ந்து தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ஜனனியில் பிறந்த நாள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த புகைப்படங்கள் குறித்து தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madhumitha ethirneechal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment