இன்றைய காலக்கட்டங்களில் சினிமா நட்சத்திரங்களுக்கு நிகராக சீரியல் நட்சத்திரங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக சமூகவலைதளங்களில் வளர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. ஆனால் இணையதள வளர்ச்சி குறைவாக இருந்த காலக்கட்டத்திலும் தனது நடிப்பின் மூலம் இன்றுவரை ரசிகர்கள் மனதில் ஸ்ராங்காக அமந்திருக்கும் சில நட்சத்திரங்களும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் நடிகை பிருந்தா தாஸ்க்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி இடம் உண்டு. இவர் சன் டி.வியில் கடந்த 2003-ம் ஆண்டு முதல், 2007 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் முக்கிய வில்லி கேரக்டரில் நடித்து அசத்தியவர் தான் பிருந்தா தாஸ். 1000-க்கு மேற்பட்ட எபிசோடுகளை கொண்ட ஆனந்தம் சீரயலில், சுகன்யா நாயகியாக நடித்திருந்தார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த சீரியலை தயாரித்திருந்தது.
குடும்பத்தில் நடக்கும் சிக்கல்கள், குடும்ப உறவுகள், பாசப்பிணைப்புகள், அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சீரியலில், டெல்லி குமார், கமலேஷ், பிருந்தா தாஸ், வட்சலா ராஜகோபால், சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 90எஸ் குழந்தைகளின் ஃபேவரேட் சீரியலான இந்த ஆனந்தம் சீரியலில், அபிராமி என்ற வில்லி கேரக்டரில் பிருந்தா தாஸ் நடித்திருந்தார். இந்த சீரியலில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
சின்னத்திரை மட்டுமல்லாமல் ஒரு சில படங்களிலும் நடித்துள்ள பிருந்தா தாஸ் ஆனந்தம்’ சீரியல் மட்டுமல்லாமல், ‘கல்யாணம்’, ‘ரேகா ஐபிஎஸ்’ உள்ளிட்ட சீரியலில் நடித்திருந்தார். அதேபோல், ‘ஹாய் டா’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிருந்தா தாஸ், தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் வரிசையில் இணைந்தார். ஒரு பரதநாட்டிய கலைஞர் ஆவார்.
மேலும் தனது சகோதரி உடன் சேர்ந்து பி-போர்ஸ் (B Force) அமைப்பை தொடங்கி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
தற்போது பிருந்தா தாஸ், கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவ்வப்போது சமூகலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவரது மகன் கிஷன் தாஸ் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ‘முதல் நீ முடிவும் நீ’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள இவர், யூடியூபராகவும், சமூக வலைதளங்களில் இன்ஃப்ளூயன்சராகவும் இருந்து வருகிறார்.