/tamil-ie/media/media_files/uploads/2022/01/Raksha1.jpg)
Anbe Sivam Serial Actress Raksha Holla Update In Tamil : வெள்ளித்திரை சின்னத்திரை எதுவாக இருந்தாலும் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிகர் நடிகைள் நடிக்க சம்மதம் தெரிவித்து நடிப்பார்கள். இதில் வெள்ளித்திரையில் ஷூட்டிங்கின்போது கேரக்டருக்கு முக்கியத்தும் இல்லை என்று ஒரு சில நடிகைகள் விலகி விடுவது வழக்கம். இது வெள்ளித்திரையில் மிகவும் அரிதான ஒன்று.
ஆனால் சின்னத்திரையில இது அப்படியே தலைகீழாக மாறிவிடும் என்று சொல்லாம். பொதுவாக தமிழ் சீரியல்களில் பெரும்பாலும் அண்டை மாநிலங்களை சேர்ந்த நடிகைகளே அதிகம் நடித்து வருகினறனர். நன்றாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஒரு சீரியலில் இருந்து முன்னணி கேரக்டரிலர் நடித்து வரும் நடிகை திடீரென விலகி விடுவது சின்னத்திரையில் காலம் காலமாக நடந்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அவருக்கு படவாய்ப்பு கிடைத்துவிட்டது அல்லது சீரியலில் அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டது என்று பல காரணங்கள் சொல்லப்படுவது உண்டு. அந்த வகையில் தற்போது ஜீதமிழின் ஹிட் சீரியலான அன்பே சிவம் சீரியலில் இருந்து முன்னணி நடிகயான ரக்ஷா ஹொல்லா விலகியுள்ளார். ஜீதமிழின் ப்ரைம் டைம் சீரியலான அன்பே சிவம் சீரியலில் அன்பு கேரக்டரில் நடித்து வந்த ரக்ஷா கர்நாடகாவை சேர்ந்தர்.
தற்போது இவர் விலகளுக்கான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், திடீரென ரக்ஷாவின், உடல் எடை கூடியதால், அவர் சீரியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது இதை கேட்ட ரசிகர்கள் இதுக்கெல்லாமா சீரியலில் இருந்து தூக்குவீங்க என்னப்பா இப்படி பண்றீங்ளே என்று கேட்டு வருகினறனர். கர்நாடகாவை சேர்ந்த ரக்ஷா ஹொல்லா விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.