திரைப்படத்தில் நடித்து சீரியலில் என்ட்ரி ஆகி மீண்டும் திரைப்படத்தில் பிஸியான நடிகைகளில் முக்கியமானவர் வாணி போஜன். 2010-ம் ஆண்டு வெளியான ஓர் இரவு படத்தின் மூலம் திரைத்துரையில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து அதிகாரம் 79 என்ற படத்தில் நடித்த வாணி போஜன், படங்களில் சரியான வாய்ப்பு இல்லாததால் சீரியல் பக்கம் தனது கவனத்தை திருப்பினார்.

அந்த வகையில் இவர் விஜய் டிவியின் ஆஹா, மற்றும் ஜெயா டிவியின் மாயா உள்ளிட்ட தொடர்களில் நடித்திருந்தாலும் இவருக்கு சின்னத்திரையில் பெரிய வரவேற்பு கிடைக்க செய்தது தெய்வமகள் சீரியல்.

கடந்த 2013-ம் ஆண்டு ஒளிபரப்பான இந்த சீரியலில் முதலில் நடிகை விஜயலட்சுமி நடித்து வந்த கேரக்டரில் வாணி போஜன் நடிக்க தொடங்கினார். 5 வருடங்கள் ஒளிபரப்பான இந்த சீரியல் பெரிய வெற்றியை கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலில் நடித்த வாணி போஜன், 2017-ம் ஆண்டு பிரேமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்கு வந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழில் ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டூ அம்னீசியா, மகான், மிரள் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் நடிப்பில் பல படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் வாணி போஜன் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மஞ்சள் உடையில் இவர் உள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே தான் சாம்பியன் என்பதை இன்டேரக்டா சொல்றீங்களா என்று கேட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil