2010-ம் ஆண்டு வெளியான ஓர் இரவு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் வாணி போஜன். அதன்பிறகு 2012-ம் ஆண்டு அதிகாரம் 79 என்ற படத்தில் நடித்திருந்தார்.
2/7
அடுத்து சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சின்னத்திரை பக்கம் திரும்பிய வாணி போஜன் ஆஹா என்ற தொடரின் மூலம் அறிமுகமானார்.
3/7
அதனை தொடர்ந்து மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார். இதில் தெய்வமகள் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
Advertisment
4/7
அதன்பிறகு 2020-ம் ஆண்டு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்டரி ஆன வாணி போஜனுக்கு ஓ மை கடவுளே படம் பெரிய வெற்றியை கொடுத்தது.
5/7
அடுத்து லாக்கப், மலேசியா டூ அம்னீசியா, மிரள், ராமன் ஆண்டளும் ராவணன் ஆண்டாலும் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். விக்ரம் பிரபுவுடன் பாயும் ஒளி நீ எனக்கு என்ற படத்தில் நடித்திருந்தார்.
6/7
தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ள வாணி போஜன் அடுத்து ஆரியன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
Advertisment
Advertisements
7/7
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் வாணி போஜன் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.