Advertisment

நடிப்பில் பிஸி... அமெரிக்காவில் டாக்டர்: நடிகை வித்யா பிரதீப் வைரல் போட்டோ

சினிமாவில் பிஸியாக இருந்தாலும் அமெரிக்காவில் டாக்டராக இருக்கும் வித்யா பிரதீப் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Vidya Pradeep Wed

வித்யா பிரதீப்

சின்னத்திரை சீரியல் மற்றும் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துள்ள நடிரக வித்யா பிரதீப், அமெரிக்காவில் டாக்டராக பணியாற்றி வரும் நிலையில், தனது கணவருடன் அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சமூகவலைதளங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த காலக்கட்டத்தில் தங்களது நடிப்புத்திறனை வெளிப்படுத்தி பலரும் சீரியல் மற்றும் திரைப்படங்கில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் வெள்ளித்திரையில் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்து பிரபலமாகாத வித்யா பிரதீப், நாயகி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது.

கடந்த 2010-ம் ஆண்டு தமிழில் வெளியான அவள் பெயர் தமிழரசி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் வித்யா பிரதீப். கேரளாவை சேர்ந்த இவர் அடுத்து விருந்தாளி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த 2 படங்களுமே அவருக்கு கை கொடுக்கவில்லை. அதன்பிறகு தமிழில் சைவம், அதிபர், அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

மேலும் தனுஷின் மாரி படத்தில் கிருஷ்ணாவின் மனைவியாக நடித்திருந்த வித்யா பிரதீப், அருண்விஜய் நடிப்பில் பெரும் வெற்றிப்படமாக அமைந்த தடம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த வித்யா பிரதீப், சித்திரை செவ்வானம், எண்ணி துணிக, டி3, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது யாதும் ஊரே யாவரும் கேளீர், இன்பினிட்டி, எகோ, கண்ணகி அசுரகுளம், ஸ்ரிக்கர், தி புக் உள்ளிட்ட சில படங்களில் நடித்து முடித்துள்ளார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் வித்யா பிரதீப் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது திருமண நாளில் திருமணமாகி 13-ஆண்டுகள் கடந்ததை நினைவு கூறும் வகையில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

தற்போது நடிப்பில் பிஸியாக இருந்தாலும் அமெரிக்காவில் மருத்துவராகவும் பணியாற்றி வரும் வித்யா பிரதீப், தற்போது கணவரின் பிறந்த நாளில், தனது கணவருடன் இணைந்து வெளியிட்டுள்ள வித்தியாசமாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vidhya Pradeep
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment