இல்லத்தரசிகளின் முக்கிய பொழுதுபோக்கு சின்னத்திரை நிகழ்ச்சிகள். காலையில் தொடங்கி நள்ளிரவு வரை பல சேனல்களில் சீரியல் மட்டுமே ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல் வார இறுதி நாட்களில் சீரியலுடன் சேர்த்து ரியாலிட்டி ஷோக்களும் கலைகட்டுகிறது.
Advertisment
இதனால் பல சேனல்கள் அவ்வப்போது புதிய சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை களமிறங்கி வருகினறனர். இதில் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் நிலையில், ஒரு சில நிகழ்ச்சிகள் வரவேற்பை பெற தவறிவிடுகின்றன.
Advertisment
Advertisements
ஆனாலும் இந்த சின்னத்திரைக்கான வரவேற்பு மட்டும் குறையாமல் அப்படியே உள்ளது. இதனால் தற்போது இளைஞர்கள் பலரும் சீரியலை பார்க்க தொடங்கி விட்டனர்.
எவ்வளவுதான் நன்றாக வரவேற்பை பெற்ற சீரியலாக இருந்தாலும், ஏதாவது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும். இதனால் ஆனால் நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தாலும் இல்லை என்றாலும் மீம்ஸ்கள் எப்போதும் வரவேற்பை பெற தவறுவதில்லை.
எவ்வளவு பெரிய சீரியஸான காட்சியாக இருந்தாலும் அதனை காமெடி நடிகர் ஒருவரின் முகத்தை வைத்து சிரிக்க வைப்பதில் மீம்ஸ்கள் கவனம் ஈர்க்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“