Advertisment

அம்மா இறந்த அடுத்த நாளே திருமண வரவேற்பு: இதெல்லாம் தேவையா? அண்ணா சீரியல் அப்டேட்!

அம்மா இறந்த அடுத்த நாளே மகளுக்கு திருமண வரவேற்பு நடைபெறுவதால், அண்ணா சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
KD ANsns

கார்த்திக்கு வரும் புது சிக்கல்.. சென்னை வந்த ரியல் தீபா, நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா உயிருடன் இருப்பது தெரிய வந்த நிலையில் இன்று, கீதாவை பரிசோதனை செய்த டாக்டர் சென்னையில் கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலில் கொண்டு போய் சேர்க்க சொல்ல அந்த பெண்மணியும் தீபாவை ஹாஸ்பிடலில் சேர்க்க முடிவெடுக்கிறாள். தீபா கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி சாமி வேண்டி கொண்டு பூஜை அறையில் வைத்து விடுகிறாள்.

இதை தொடர்ந்து வீட்டில் கார்த்திக் தீபாவின் நினைவுகளால் கவலைப்பட்டு கொண்டிருக்க தூக்கத்தில் இருந்து எழுந்த நிலையில், கீதா என்ன கார்த்திக் தீபாவை மிஸ் பண்றீங்களா என்று கேட்க அவனும் ஆமாம் தீபா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று பீல் செய்கிறான். அதன் பிறகு கர்நாடகாவில் மிஸ்டர் தூங்கா காட்டப்பட அவர் போலீசை கூப்பிட்டு ஒரு பொண்ணை போய் தப்பிக்க விட்டு இருக்கீங்க, எனக்கு அந்த கீதா கிடைத்தாகணும் என்று சத்தம் போடுகிறான்.

போலீஸ் கீதா சென்னையை விட்டு எங்கேயும் போய் இருக்க முடியாது, கூடிய சீக்கிரம் கண்டு பிடித்து விடுவோம் என்று சொல்கிறாள். அடுத்த நாள் தூங்கா சென்னை கிளம்பி வர தீபாவை அந்த பெண்மணி ஆட்டோவில் சென்னைக்கு அழைத்து வர இன்னொரு பக்கம் கார்த்திக்கும் வெளியே கிளம்பி வருகிறான், மூவரும் ஒரே சிக்னலில் நிற்கின்றனர், ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளவில்லை. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,

ரிசப்ஷன் நிகழ்ச்சியில் ரத்னா.. சௌந்தரபாண்டி போடும் அடுத்த திட்டம் 

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா, வெங்கடேஷ் ரிசப்ஷனுக்கு சண்முகம் சம்மதம் சொன்ன நிலையில் இன்று, ரத்னா அம்மா இல்லாத போது இதெல்லாம் தேவையா? நான் போக மாட்டேன் என்று அழுது புலம்ப சண்முகம் அம்மா போட்டோ முன்னாடி கொண்டு போய் நிறுத்தி அம்மா இருந்து இருந்தால் என்ன பண்ணி இருப்பாங்களோ அதை தான் பண்ணி இருக்கேன் என்று சொல்கிறான். 

இதை தொடர்ந்து மறுபக்கம் ரிஷப்ஷனுக்கான ஏற்பாடுகள் நடக்க வெங்கடேஷ் குடும்பத்தினர் ரத்னாவிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர், எல்லாரும் ரத்னா வருவாளா என்று கேள்வி எழுப்ப சண்முகம் வாக்கு கொடுத்திருக்கார், கண்டிப்பா வருவா என்று வெங்கடேஷ் அம்மா சொல்ல சண்முகம் ரத்னாவையும் கனியையும் அழைத்து வருகிறான்.

பிறகு சண்முகத்தையும் மண்டபத்தில் இருக்க சொல்ல அவன் அம்மாவுக்கு விளக்கு போடணும் என்று சொல்லி கிளம்பி செல்கிறான், அடுத்து ரத்னா விருப்பமில்லாமல் மேடை ஏறுகிறாள். அதன் பிறகு சௌந்தரபாண்டி வெங்கடேஷ் தாய் மாமாவிற்கு போன் செய்து ரிசப்ஷன் நின்னு போச்சா என்று கேட்கிறார். சண்முகம் ரத்னாவை கூட்டிட்டு வந்து விட்டுட்டான், இந்த வரவேற்பு நிகழ்ச்சி நல்லபடியா நடக்கும் என்று சொல்கிறான்.

4 பேரை ஏற்பாடு செய்து சூடாமணி பற்றி பேச வை, ரத்னாவே அங்கிருந்து ஓடி போய்டுவா என்று அடுத்த திட்டத்தை சொல்கிறார். இங்கே சண்முகம் வீட்டில் விளக்கு போட எல்லா வேலைகளும் நடந்து கொண்டிருக்க வைகுண்டம் மரத்தின் அருகே அமர்ந்து சூடாமணியை நினைத்து கலங்குகிறார், இதை பார்த்த பரணி அவருக்கு ஆறுதல் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment