Advertisment

தீபா போய் கீதா... கார்த்திக்கு வந்த குழப்பம்; கார்த்திகை தீபம் கரை சேருமா!

ஜீ தமிழின் அண்ணா மற்றும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசேட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
zee tamil KD anna

போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிய கீதா.. கார்த்திக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் முருகன் கெட்டப் போட்டுக் கொண்டிருக்கும் சிறுவனுடன் ஒரு ஓட்டலுக்கு வர அதே ஹோட்டலில் தீபா உருவத்தில் போலீஸ் பிடியில் இருக்கும் பெண்ணும் சாப்பிட வந்த நிலையில் இன்று, கார்த்திக் இந்த பெண்ணை பார்க்காமல் இருக்க முருகன் படத்திலிருந்து சிறுவன் இந்த பெண் கையில் விலங்குடன் சாப்பிடுவதை பார்த்து கார்த்தியிடம் சொல்ல கார்த்திக் திரும்பிப் பார்க்க இந்த பெண்ணின் முகம் தெரியாமல் இருக்கிறது.

பிறகு அதெல்லாம் நீ எதுக்கு பாக்குற ஏதாச்சு தப்பு பண்ணி இருப்பாங்க என்று சொல்கிறான். இங்கே தீபா வேடத்தில் இருக்கும் கீதா விதவிதமாக ஆடர் செய்து வெளுத்து கட்ட போலீஸ் என்னம்மா இப்படி சாப்பிடுற என்று கேட்க இன்னும் கொஞ்ச நேரத்துல என்னை கொல்ல போறீங்க எனக்கு புடிச்சது சாப்பிட்டுக்கிறேன் என்று சமாளிக்கிறாள். கண்டதை சாப்பிட்டு வாந்தி எடுத்து போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆகி விட வேண்டும் என திட்டமிடுகிறாள்.

பிறகு கார்த்திக் முருகன் வேடத்தில் இருக்கும் சிறுவனை வீட்டில் டிராப் செய்ய அவன் நீ தேடிய பொருள் சீக்கிரம் கிடைக்கும் என்று சொல்லி வீட்டிற்குள் செல்கிறான். இங்கே கீதா வாந்தி எடுத்து போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பித்து ஓடி வருகிறாள்.  ஒரு கட்டத்தில் கார்த்திக் கார் மீது வந்து மோதி கீழே விழ கார்த்திக் அவளை காப்பாற்ற தீபா உருவத்தில் இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறான். இது தீபாவாக இருக்க வாய்ப்பில்லை என்ற குழப்பத்தோடு அவளை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரத்னா கழுத்தில் தாலி ஏறுமா? சூடாமணி உயிருக்கு வரும் ஆபத்து - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் எல்லாரும் ரத்னாவின் கல்யாணத்திற்கு கிளம்பி வர சௌந்தரபாண்டி கல்யாணத்தை நிறுத்த திட்டமிட்ட நிலையில் இன்று, சித்தர் பாக்கியத்திடம் இந்த கல்யாணம் நடக்க கூடாது, கல்யாணத்தை நிறுத்து என்று சொன்னதும் பாக்கியம் அதிர்ச்சி அடைகிறாள். இதை தொடர்ந்து கோப்பெருந்தேவியை திருமணம் செய்ய இருந்த மருதப்பனும் சௌந்தரபாண்டி திட்டத்தின் படி கோவிலுக்குள் வருகிறான்.

படிக்கட்டில் ஏறி வரும் போது இசக்கி மீது இடிக்க இசக்கி கோபமாகி மாமா இவனை அடிங்க என்று சொல்ல முத்துப்பாண்டி மருதப்பனை அறைகிறான். பிறகு சண்முகம் இருவரையும் பிரித்து விட மருதப்பனை பார்த்ததும் அவன் இன்னும் கோபமாகிறான். இருவருக்கும் மோதல் உருவாகும் நிலை வர பாக்கியம் சண்டை வேண்டாம் என்று பிரித்து விடுகிறாள். அடுத்து மருதப்பன் சௌந்தரபாண்டியை சந்திக்க மீண்டும் சண்முகத்துடன் மோதல் உருவானதாக சொல்கிறான்.

சண்முகத்தை கொன்றால் தான் அவன் தங்கச்சி கழுத்தில் தாலி கட்ட முடியும் என்று சொல்ல, சௌந்தரபாண்டி நீ என்ன வேணா பண்ணு.. உனக்கு துணையா என் ஆளுங்க இருக்காங்க என்று சொல்கிறான். பிறகு சௌந்தரபாண்டி மருதப்பன் ரத்னா கழுத்தில் தாலி கட்டட்டும் நீங்க சூடாமணியை போட்டு தள்ளுங்க, அப்போ தான் அந்த பழி மருதப்பன் மேல விழும், நான் தப்பிக்க முடியும் என்று திட்டம் போடுகிறார்.

பிறகு கல்யாண வேலைகள் பரபரப்பாக நடக்க சண்முகத்திற்கு இந்த கல்யாணத்தில் பிரச்னை வருமா என்ற நெருடல் உருவாகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment