Advertisment

அப்பாவை தப்பிக்க விடும் மகன்: குழந்தைகளை பிரியும் ஹீரோயின்; அம்மா நிலைமை என்ன?

ஜீ தமிழின் அண்ணா மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Anna and Nvn

சௌந்தரபாண்டியை தப்பிக்க வைக்க முத்துப்பாண்டி போடும் திட்டம், சண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் மாறுவேடம் போட்டு ரத்னாவையும் வெங்கடேஷனையும் சேர்த்து வைத்த நிலையில் இன்று, வீட்டிற்கு வந்த சண்முகம் ரத்னாவும் வெங்கடேஷும் ஒன்று சேர்ந்து விட்டதாக சொல்கிறான், யாரோ ஒரு ரெண்டு பேரால் தான் இப்படி நடந்ததாக சொல்ல உடன்குடி சண்முகம் தான் இதற்கு காரணம் என்ற உண்மையை உடைக்க மொத்த குடும்பமும் சந்தோஷமடைகிறது.

அடுத்து சௌந்தரபாண்டி ஏ.கே.எஸ் அண்ணாச்சியை கூப்பிட்டு நான் வெளியே வரும் போது அந்த சூடாமணி உயிரோட இருக்க கூடாது என்று சொல்கிறார். செத்து போன திருடனோட புள்ளைங்களுக்கு சூடாமணி வந்திருக்கும் விஷயங்களை தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார். அடுத்து ஏ.கே.எஸ் அண்ணாச்சி அந்த திருடனின் வாரிசு நம்பரை தேடி கண்டுபிடித்து உன் அப்பாவை கொன்னவள் இங்க தான் இருக்கா என்று சொல்ல அவங்களை உயிரோட விட மாட்டேன் என்று கிளம்பி வருகின்றனர்.

அடுத்து வைகுண்டம் இந்த 60-ம் கல்யாணம் எல்லாம் தேவையா என்று பேச சண்முகம் கண்டிப்பா தேவை என்று சொல்கிறான். பிறகு சண்முகம் அப்பா அம்மா பெயரில் ஸ்பெஷல் அர்ச்சனை செய்ய கோவிலுக்கு வந்திருக்க முத்துப்பாண்டி குளத்தில் மூழ்கி எழுந்து ரவுடிகளுக்கு போன் செய்து சனியனை கடத்த சொல்கிறான். அப்பா ரிலீஸ் ஆக வேண்டும் என்று பேசி கொண்டிருக்க இதை கனி கேட்டு விட முத்துப்பாண்டி அதிர்ச்சி அடைகிறான்.

பிறகு கனி ஓடி வந்து சண்முகத்திடம் அப்பாவுக்கு இவர் தானே தண்டனை வாங்கி தரணும், இவரே அப்பா ரிலீஸ் ஆகணும்னு சாமி குடும்பிடுவதாக சொல்ல முத்துபாண்டி சமாளிக்கிறான். அடுத்து ரவுடிகளை சந்தித்து முத்துப்பாண்டி அப்பாவை தப்பிக்க வைக்க சொல்லி பணத்தை கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சுடரை வெளிநாடு அனுப்பும் எழில்.. மனோகரின் திட்டத்தால் துடிக்கும் குழந்தைகள் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் மனோகரி எழிலிடம் சுடர் கல்யாணத்தை நிறுத்த திட்டமிடுவதாக சொல்லி ஏற்றி விட்ட நிலையில் இன்று, எழில் சுடரிடம் வந்து நீ உன்னுடைய கனவில் கவனத்தை செலுத்து, நீ என் குழந்தைகளை நல்லபடியா பார்த்துகிட்ட, நீ போன பிறகு நானும் குழந்தைகளும் உன்னை கண்டிப்பா மிஸ் பண்ணுவோம் என்று சொல்லி பிளைட் டிக்கெட்டை கொடுக்க சுடர் அதிர்ச்சி அடைகிறாள்.

அதனை தொடர்ந்து ரூமுக்கு வந்த எழில் சுடரிடம் இப்படி பேசிட்டோமே என்று வருத்தப்பட அங்கு வரும் இந்துவின் ஆன்மா அந்த மனோகரி நல்லவள் இல்ல, இந்த கல்யாணத்தை இப்போவே நிறுத்திடுங்க சுடரை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் சொல்கிறாள். அடுத்து சுடர் தனது அப்பாவுக்கு போன் செய்து எழில் பிளைட் டிக்கெட்டை கொடுத்து வெளிநாட்டிற்கு போக சொல்லி விட்டதாக சொல்லி வருந்த அவரும் சரி விடு மா, நீ வெளிநாட்டுக்கு போ. ஆனால் என்னை ஒன்னு நீ போன பிறகு அந்த குழந்தைகள் கஷ்டப்படும் என்று வருந்துகிறார்.

அடுத்த நாள் சுடர் வெளிநாடு கிளம்ப குழந்தைகள் சுடருக்கு கிப்ட் கொடுத்து கண் கலங்குகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment