சபையில் வைத்து அவமானப்படுத்திய சௌந்தரபாண்டி, சண்முகத்தின் முன் சபதம் போட்ட சூடாமணி
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி வெங்கடேஷின் தாய் மாமாவை அறைந்து தனது திட்டத்தை சொல்லி அழைத்து வந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, நிச்சயதார்த்தத்திற்காக கோவிலில் இரண்டு குடும்பமும் ஒன்று கூட சண்முகம் மாப்பிள்ளை வீட்டில் வரவேற்க ஆள் இல்லாததால் மன்னிப்பு கேட்க வெங்கடேஷ் சீக்கிரமா வந்தது எங்களுடைய தப்பு தான் என்று சொல்கிறான். அடுத்து சௌந்தரபாண்டி சூடாமணியை தேட அவள் ஒரு ஓரமாக முக்காடு போட்டு மறைந்திருப்பதை கவனிக்கிறார்.
நிச்சயதார்த்த ஓலை படிக்க போகும் போது சௌந்தரபாண்டி சந்தனத்திடம் நீ அவங்க அம்மாவை பத்தி மட்டும் கேளு மத்ததை சனியன் பார்த்துப்பான் என்று சொல்கிறார். அதே போல் சந்தனம் முதலில் தாய் மாமா யாரு என்று கேட்க உடன்குடி வந்து நிற்க இவன் எல்லாம் எனக்கு நிகரா உட்காருவனா என்று சத்தம் போட பாக்கியம் முத்துபாண்டியை தாய் மாமாவாக உட்கார வைக்க சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறார்.
அடுத்து சண்முகத்தின் அம்மாவை பற்றி பேச சனியன் இவங்க அம்மா அங்க இருக்காங்க என்று சொல்லி முக்காட்டு போட்டிருக்கும் பெண்ணை இழுத்து விட அது சனியனின் மனைவி என தெரிய வர சௌந்தரபாண்டி பல்பு வாங்குகிறார். இதை தொடர்ந்து பிளாஷ்கட்டில் சண்முகம் அம்மாவின் புடவையை சனியனின் பொண்டாட்டிக்கு கொடுத்து கூட்டிட்டு வந்தது தெரிய வருகிறது. இதனால் கடுப்பாகும் சௌந்தரபாண்டி சனியனை வைத்து ஒரு திட்டத்தை தீட்டுகிறான்.
அதாவது சனியன் மைக்கில் சௌந்தரபாண்டி சண்முகத்தை குத்திக்கிட்டார், சண்முகம் ரத்த வெள்ளத்தில் கிடக்கான் என்று சொல்ல சூடாமணி பதறியடித்து ஓடி வர சௌந்தரபாண்டி இவ தான் இவங்க அம்மா என்று காட்டி கொடுக்கிறான். சூடாமணி நான் உத்தமி நீ தான் குற்றவாளின்னு என் பையனும் மருமகளும் நிரூபித்து உன்னை ஜெயிலுக்கு அனுப்புவாங்க. இது நடக்கலைனா நான் தீ குளிப்பேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லெட்டர் எழுதி வைத்து வீட்டை வெளியேறிய சீனு.. அடுத்து நடக்க போகும் விபரீதம் என்ன?
சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா மற்றும் தனம் என இருவரும் கேம்ப்க்கு கிளம்ப தயாராக மணி சீனுவை வீட்டை விட்டு ஓடி விட சொல்லி ஐடியா கொடுத்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது மாயா மற்றும் தனம் என இருவரும் கேம்பிற்கு கிளம்பி வர ஜானகி இருவருக்கும் பணம் கொடுத்து அனுப்பி வைக்கிறாள். கேம்ப்புக்கு வந்த இடத்தில அந்த மைதானத்தை பார்த்து ரசிக்கின்றனர். அதன் பிறகு மாயா மற்றும் தனத்திற்கு கயிறு இழுக்கும் போட்டி நடக்கிறது. அதே போல் மறுபக்கம் மணி கண்ணை காட்டுகிறான்.
அதை பார்த்த சீனு எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க. நானும் மாயாவும் காதலிக்கிறோம். இந்த ஊரை விட்டு போய் எங்க வாழ்க்கையை தொடங்க போறோம் என்பது போல் ஒரு லெட்டர் எழுதி வைத்து விட்டு கேம்ப் நடக்கும் இடத்திற்கு கிளம்பி வருகிறான்.
இங்கே கயிறு இழுக்கும் போட்டியில் மாயா வெற்றி பெற தனம் விட்டு கொடுக்கிறாள். அதன் பிறகு எனக்காக நீ நிறைய விட்டு கொடுத்திருக்க என்று மாயாவிடம் உணர்ச்சி பொங்க பேசுகிறாள். அடுத்து சீனு கேம்ப் நடக்கும் இடத்திற்கு வந்து சேர செக்யூரிட்டி உள்ளே விட மறுக்கிறார். இதனால் சீனு என்ன செய்வது என்று தெரியாமல் யோசிக்கிறான்.
இங்கே வீட்டில் சீனுவை காணாமல் எல்லாரும் பதற மணி எல்லாரையும் சமாளிக்கிறான். அதன் பிறகு டைரியை கொண்டு வந்து வைக்க அதில் இருக்கும் லெட்டரை படிப்பார்களா? இல்லையா? அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“