அபிராமியை அவமானப்படுத்திய பேசிய துர்கா.. சப்போர்ட்டுக்கு வந்த ரேவதி, கோவிலில் நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் அபிராமி சொன்னதால் சாமுண்டீஸ்வரியின் மகள்களுடன் கோவிலுக்கு கிளம்பிய நிலையில் இன்று, கார்த்திக் சாமுண்டேஸ்வரியின் மகள்களுடன் கோவிலுக்கு வர அபிராமி ஏழ்மையான கெட்டப்பில் ஓரமாக நின்று இதை பார்க்கிறாள். அதை தொடர்ந்து கார்த்திக் தனியாக வந்து அம்மாவிடம் என்னமா இது கோலம் என்று கேட்க அபிராமி நீ தான் அவங்களுக்கு நாம பணக்காரர்கள் என்று தெரியாதுனு சொன்னியே என்று சொல்கிறாள்.
இதையடுத்து சாமுண்டீஸ்வரின் மகள்கள் எல்லாரும் வந்து நின்று கார்த்திக் யாரிடம் பேசிட்டு இருக்க என்று ஷாக் கொடுக்கின்றனர். ஆபிராமி அத்தை என்று சொல்ல இவர்கள் அத்தையா என்று குழப்பம் அடைய கார்த்தியின் அம்மா என்று சொல்லி சமாளிக்கிறாள். அதன் பிறகு சாமுண்டேஸ்வரியின் மகள்கள் அபிராமியின் கோலத்தை பார்த்து கோவிலில் பிச்சை எடுப்பவர் போல் இருப்பதாக சொல்லி கிண்டல் அடிக்க ரேவதி பெரியவர்களிடம் அப்படியெல்லாம் பேச கூடாது என்று திட்டுகிறாள்.
பிறகு கார்த்திக் சாமுண்டேஸ்வரியின் மகள்களை அறிமுகம் செய்து வைக்கிறான். ரேவதி உங்களால் தான் உங்க அம்மா இப்படி இருக்காங்க என்று கார்த்தியை பிடித்து திட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
விலை பேசப்பட்ட ரத்னா.. தங்கையை சண்முகம் மீட்டெடுக்க போவது எப்படி? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் கனி உடம்பில் இறங்கிய சூடாமணி ரத்னா உயிரோடு தான் இருப்பதாக சொல்லிய நிலையில் இன்று, சூடாமணி சொன்ன இடத்தை நோக்கி சண்முகம் குடும்பத்தினர் விரைந்து வர அங்கே ரத்னாவின் உடல் கரை ஒதுங்க இறந்து விட்டதாக நினைத்து ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
பிறகு சண்முகம் குடும்பத்தினர் அங்கு வந்ததும் இறந்து விட்டதாகவும் பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் சொல்ல சண்முகம் குடும்பத்தினர் அலறி அடித்து கொண்டு ஹாஸ்பிடல் வருகின்றனர். ஹாஸ்பிடலில் ரத்னாவை பரிசோதனை செய்த நர்ஸ் உயிர் இழந்து விட்டதாக சொல்ல போஸ்ட் மாடத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.
போஸ்ட் மாடர்ன் செய்பவர் இப்போ தான் நிறைய போஸ்ட் மாடர்ன் செய்ய லேட் ஆகும் என்கிறார். இந்த நேரத்தில் ஒரு நர்ஸ் வந்து பார்க்க ரத்னாவுக்கு உயிர் இருப்பது தெரிய வருகிறது. உடனே அந்த நர்ஸ் பெரிய நர்ஸிடம் விஷயத்தை சொல்ல பெரிய நர்ஸ் ரௌடி ஒருவனுக்கு போன் செய்து ஒரு ஆள் இருப்பதாகவும் இறந்து விட்டதாகவும் பைல் எழுதி விட்டதாகவும் உன் தங்கச்சி என நாடகமாடி கூட்டிட்டு போய்ட்டு என்று ஐடியா கொடுக்கிறாள்.
இதையடுத்து சண்முகம் குடும்பத்தினர் ஹாஸ்பிடலுக்கு வந்து ரத்னா குறித்து விசாரிக்க ஒரு நர்ஸ் ரத்னா இருக்கும் ஸ்டார்கரை காட்ட சண்முகம் முகத்தை திறக்க போகும் சமயத்தில் பெரிய நர்ஸ் ஓடி வந்து அது உன் தங்கச்சி இல்ல உள்ள இருக்கா என்று கவனத்தை திருப்பி ரத்னாவை ரவுடியிடம் ஒப்படைக்கிறாள். கடைசி நொடியில் சண்முகம் ரத்னாவை பார்த்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
மாயாவின் சந்தோசத்தை அழிக்க கார்த்திக் போட்ட திட்டம்.. சீனுவின் உயிரை காப்பாற்ற போவது யார்? சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்
சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கதிர் தனத்துக்காக முளைப்பாரி வாங்கி வந்து கொடுத்த நிலையில் இன்று, கதிர் முளைப்பாரி வாங்கி வந்து கொடுக்க தனம் அவனை முறைத்து விட்டு வாங்கி கொள்கிறாள். பிறகு முளைப்பாரியை எடுத்து கொண்டு ஊர்வலமாக வருகின்றனர். அதை தொடர்ந்து கோவிலுக்கு வந்ததும் சீனு மாயா பெயரை பச்சை குத்தி இருப்பதை வைத்து அவனை கலாய்த்து சிரிக்கின்றனர். கருப்பசாமி தூக்கிட்டு போய் பச்சை குத்தி விட்டதாக சொல்கின்றனர்.
இதையடுத்து மாயா சந்தோசமாக இருப்பதை பார்த்த கார்த்திக் ரொம்ப சந்தோசமாக இருக்கியா.. உன் சந்தோசத்தை அழிக்கிறேன் என சபதம் எடுக்கிறான். உடனே ரவுடிகளை வர வைத்து சீனுவின் போட்டோவை காட்டி அவனை தூக்கிடுங்க என்று சொல்கிறான். அதனை தொடர்ந்து கருப்பாகி ஊர்வலம் தொடங்குகிறது. கருப்பசாமி ஊர்வலம் வர ரவுடிகள் இடையில் புகுந்து சீனுவை தூக்கி விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.