Advertisment

நடிகை திடீர் விலகல்... டான்சர் கௌரி கோபன் நியூ என்ட்ரி : அண்ணா சீரியலில் முக்கிய மாற்றம்

ஜீ தமிழின் அண்ணா சீரியலில் முக்கிய நடிகை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், கௌரி கோபன் புதிய என்ட்ரி கொடுக்க உள்ளார்.

author-image
WebDesk
New Update
Dance Gowri Gopan

டான்ஸ் ஜோடி டான்ஸ் கௌரி கோபன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஜீ தமிழின் முக்கிய சீரியல்களில் ஒன்று அண்ணா. மிர்ச்சி செந்தில், நித்யா ராம் ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில் ரோசாரியோ, பூவிலங்கு மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். அழுத்தமான கதைக்களம் மற்றும் நடிகர்களின் சிறப்பான நடிப்பால், ரசிகர்கள் மத்தியில் அண்ணா சீரியலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

Advertisment

கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங்கை பெற்று வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக உள்ளது. அம்மா இல்லாத நிலையில், தனது 4 தங்கைகளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சண்முகம், சிறு வயதிலிருந்தே தனது குடும்பத்திற்கு பொறுப்புகளை சுமந்து வருகிறார். அதேபோல் குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்றாலும், எதிர்த்து சண்டைபோடும் வல்லமை உடையவர்.

அவ்வப்போது ஆக்ஷன் செண்டிமெண்ட் போன்ற காட்சிகள் காரணமாக அண்ணா சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக மாறிவிட்ட நிலையில், இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் சண்முகத்தின் 2-வது தங்கை வீரலட்சுமி என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் நடிகை வி.ஜே.தாரா. சீரியல் தொடங்கிய சில மாதங்களில் அவருக்கு சந்தியா ராகம் சீரியலில் நாயகி வாய்ப்பு கிடைத்ததால் வெளியேறிவிட்டார்.

அவருக்கு பதிலாக வீரலட்சுமி கேரக்டரில் நடித்து வந்தவர் நடிகை தர்ஷூ சுந்தரம். இந்த கேரக்டரில் அவர் சிறப்பாக நடித்து வந்த நிலையில், தற்போது அவரும் சீரியலில் இருந்து விலகியுள்ளார். தனது குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவதால் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் அவர், அடுத்து வீரா கேரக்டரில் நடிக்க வரும் நடிகைக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வரும் அடுத்த வீரா யார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக. தற்போது அண்ணா சீரியலின் வீரா கேரக்டரில் நடிக்க நடிகை கௌரி கோபன் தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற இவர், நடிகை மாடல், சமூகவலைதளங்களில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் 2.0 அரையிறுதியில் பங்கேற்றிருந்த இவருக்கு தற்போது சின்னத்திரை சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது. கௌரி கோபன் சீரியலில் என்ட்ரி ஆகும்போது கதைக்களம் புதிய திருப்பதை நோக்கி பயணித்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anna Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment