தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. ரத்னா திருமணத்தை நோக்கி இந்த சீரியல் கதைக்களம் நகர்ந்து வந்த நிலையில் சௌந்தரபாண்டி சூழ்ச்சியால் மருதப்பன் சண்முகத்தை குத்த வர சூடாமணி குறுக்கே வந்து கத்தி குத்து வாங்கி உயிரை விட்டு விட்டார்.
Advertisment
இதனால் சண்முகம் குடும்பம் மொத்தமும் சோகத்தில் மூழ்கி விட்டது. நான்கு தங்கைகளும் சண்முகமும் சேர்ந்து சூடாமணியின் இறுதி சடங்குகளை செய்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்களின் கண்களையும் குளமாக்கியுள்ளது. இந்த காட்சிகள் தொடர்பாக வெளியான ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த ரசிகர்கள் சூடாமணியை ஏண்டா கொன்னீங்க? என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சண்முகமும் அவன் தங்கைகளும் அழும் காட்சிகளை பார்க்கும் கண்கள் கலங்குவதாக கமெண்ட்டுகளில் கண்ணீர் விட்டு வருகின்றனர். மேலும் 20 வருஷமா ஜெயிலில் இருந்து பரோலில் வந்த சூடாமணி இனியாவது குடும்பத்தோடு சந்தோசமாக இருப்பது போல் கதையை கொண்டு போய் இருக்கலாம், ஆனால் இப்படி பண்ணிடீங்களே.. சீரியலாக இருந்தாலும் மனசு கஷ்டமா இருக்கு என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர்கள் அனைவரும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து வருவதாவும் பாராட்டி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“