சன் டி.வி சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், புதிய சீரியல் ஒன்று என்ட்ரி ஆவதால், பழைய சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சின்னத்திரையில், சீரியல்களின் வரவு ரசிகர்களுக்கு பெரிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரசித்து பார்க்கும் இந்த சீரியல்கள், கிராமத்தில் கூட தங்களது காலடி தடத்தை பதித்துள்ளனர். இதை புரிந்துகொண்ட சேனல்களும், அவ்வப்போது புதிய சீரியல்களை களமிறங்கி வருகிறது.
இதில் குறிப்பாக சன் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அனைத்து சீரியல்களும் ஏறக்குறைய ஒரே கதையம்சம் தான் என்றாலும் கூட ஒவ்வொரு சீரியலுக்கும் தனித்தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தங்களுக்கு பிடித்தமான சீரியலில் இருந்து எந்த ஒரு மாற்றம் இருந்தாலும், அது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவது தவறாமல் நடக்கும் ஒரு வழக்கம்.
அந்த வகையில், சன் டி.வியில் புதிதாக லட்சுமி மற்றும் மீனா ஆகிய இரண்டு புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் பழைய சீரியல்களில் ஒளிபரப்பு நெரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, புதிய சீரியலான மீனா பகல் 11 மணிக்கும், அருவி சீரியல் பிற்பகல் 12 மணிக்கும், லட்சுமி சீரியல் மதியம் 2.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது.
சீரியல்களின் ஒளிபரப்பு நேர மாற்றம் வரும் திங்கள் (மார்ச் 18) முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படும் நிலையில், சீரியல்களின் இந்த நேர மாற்றம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“