New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Baakiyalakshmi-3.jpg)
நாள் தோறும் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலில் தற்போது இனியா பள்ளியில் போன் யூஸ் பண்ணி மாட்டிக்கொண்டார்.
சின்னத்திரையில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவை திருமணம் செய்துகொண்டு தனியாக சென்றுவிட்ட நிலையில். தற்போது இனியாவும் வீட்டை விட்டு அப்பாவிடம் சென்றுவிடுவது போல் ப்ரமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் டிஆர்பி ரேட்டிங்கிலும் முக்கிய இடத்தை பெற்று வருகிறது.
தற்போது கோபி தனது குடும்பத்தில் இருந்து பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்ட நிலையில், பாக்யா தனி ஆளாக குடும்பத்தை கவனிக்க தொடங்கிவிட்டார். இதனால் சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தனது குடும்பத்தின் மத்தியில் சந்தோஷமான வாழ வேண்டும் என்று ராதிகாவை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு பக்கத்திலேயே குடி வந்த கோபி, தற்போது சந்திக்கும் சிக்கல்கள் பரபரப்பின் உச்சமாக இருக்கிறது.
நாள் தோறும் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலில் தற்போது இனியா பள்ளியில் போன் யூஸ் பண்ணி மாட்டிக்கொண்டார். இதனால் அடுத்த பிரச்சனை தொடங்கியுள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே பள்ளியில் செல்போன் பயன்படுத்தியது குறித்து வீட்டில் அனைவரும் கேட்க பாக்யாவும், ஈஸ்வரியும் இனியாவை அடிக்க போகின்றனர்.
இதனால் ஆவேசமடையும் இனியா வீட்டை விட்டு வெளியே செல்வதாக கிளம்புகிறாள். எதேர்ச்சையாக வீட்டை விட்டு வெளியில் வரும் கோபி இதை பார்த்து இனியாவிடம் விசாரிக்க, இனியா அனைத்தையும் சொல்கிறாள் அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது இதனால் அடுத்து கோபி என்ன முடிவு செய்ய போகிறார்? இனியாவை தன்னுடன் ராதிகா வீட்டுக்கு அழைத்து செல்கிறாரா அல்லது பள்ளிக்கு சென்று பேசப்போகிறராரா என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.