Advertisment

நான் தாத்தா ஆகிட்டேன்... இனி கதை இதுதான்... பாக்யலட்சுமி சீரியல் ட்விஸ்ட் கொடுத்த கோபி

ஒரு பக்கம் ராதிகாவின் டார்ச்சர், மறுப்பக்கம் தான் கைவிட்ட பாக்யா நன்றாக வாழ்ந்து வருவதை பார்த்து உள்ளுக்குள் கதறும் கோபி

author-image
WebDesk
Jun 09, 2023 20:31 IST
Baakiyalakshmi Gopi

பாக்கியலட்சுமி கோபி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சீரியல் அடுத்து எந்த நிலையில் கதை நகரும் என்பது குறித்து கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஒரு குடும்பத்தில் கணவன் கைவிட்டால் குடும்பத்தை தனது உழைப்பால் எப்படி முன்னேற்றுவது என்பதற்கு முக்கிய எடுத்துக்காட்டு விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல். உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று கூறி பாக்யாவை விட்டு அவரது தோழியும், முன்னாள் காதலியுமாக ராதிகாவை திருமணம் செய்துகொண்ட கோபி ஒருபக்கம் கஷ்டப்பட மறுப்பக்கம் கேண்டீன் நடத்தி மகிழ்ச்சியாக இருக்கும் பாக்யாவை பார்த்து பொறாமை படுகிறார்.

ஒரு பக்கம் ராதிகாவின் டார்ச்சர், மறுப்பக்கம் தான் கைவிட்ட பாக்யா நன்றாக வாழ்ந்து வருவதை பார்த்து உள்ளுக்குள் கதறும் கோபியின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில், சின்னத்திரையில் சிவாஜி கணேசன் என்று கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தினம் தினம் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வரும் நிலையில் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வீடியோ மூலம் அட்வைஸ் கொடுத்து வருகிறார்.

இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென தான் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த நடிகர் சதீஷ் அடுத்த நில நாட்களில் மீண்டும் சீரியலில் தொடர்ந்து நடிக்க உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், நடிகர் சதீஷ் தற்போது மீண்டும் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தபடியே அதே பனியனோடு வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் வெயிலின் கொடுமை, சாப்பாடு அருமை, பெரியோர்களை மதிக்க வேண்டும் என்று பல தத்துவங்கள் கூறியுள்ள சதீஷ் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்து வரும் எபிசோடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து பேசியுள்ளார்.  அதில் எப்போதும் போல என்னுடைய வயசு என்னுடைய ஸ்கின்னு எல்லாத்தையும் பாத்திங்களா? நான் கிழவன், டம்மி பீசு, ஏதோ இந்த பாக்கியலட்சுமி சீரியலால தான் சாப்பாட்டுக்கு வண்டி ஓடிக்கிட்டு இருக்கு ஆனா இனி இனியா பாப்பா, எழில் சிங்க குட்டி இருக்கான்ல அவங்களா வச்சு தான் இனி கதை நகரப் போகுது. இதுவரைக்கும் நான் அப்பாவா இருந்தேன். இனி தாத்தா வா ஆகிட்டேன்.

நீங்க என்னுடைய வயச பத்தி கவலைப் படாதீங்க. உங்களுக்கு பாக்கியலட்சுமி சீரியல் பிடிச்சிருக்கா கண்டிப்பா பாருங்க. இனி பாக்கியலட்சுமி சீரியல் பெரிய அளவில் வரும் ஆனால் கதை தான் எப்படியோ..!? என்று கூறியுள்ளார். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு கோபி வயதான தோற்றத்தில் இருப்பது போல ஒரு போட்டோ ஒன்றை வெளியிட்டு இனி இவர்தான் கோபி என்று சதீஷ் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது சதீஷ் இவ்வாறு கூறியுள்ளதால், பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிந்து 2-வது சீசன் தொடங்கலாம் எனறும், அதில் கோபி வயசான கேரக்டரில் தாத்தாவாக நடிக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment