பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஷ் தொடரில் இருந்து வெளியேற உள்ளதாக கூறிய நிலையில், ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது தனது முடிவை அவர் மாற்றிக்கொண்டதாக அறிவித்துள்ளார்.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்ட கோபிக்கு இது சோதனைக்காலம். ஆனாலும் பாக்யாவை எப்படியெல்லம் அதிகாரம் பண்ணினாரோ அதைவிட அதிகமாக ராதிகாவிடம் பணிந்து செல்கிறார்.
இந்நிலையில், கோபி குடித்துவிட்டு இருக்கும்போது அவரது மகன் செழியன் கோபியை தன் வீட்டுக்கு கூட்டி வந்துவிட்டதால் இனிமேல் நானும் இங்குதான் இருப்பேன் என்று ராதிகாவும் பெட்டி படுக்கையுடன் வந்துவிட்டார். இதனால் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ள பாக்யா அடுத்து என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ் தவிர்க்க முடியாத சில காரணங்களால் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இது தொடர்பான அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், கஷ்டமாதான் இருக்கு ஆனாலும் வேறு வழி இல்லை நான் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறேன். இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டும் தான் என்று கூறியிருந்தார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில், பாக்கியலட்சுமி தொடரில் எழில் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் விஷால் கோபியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அப்பா.. நீங்க எங்கேயும் போகக் கூடாது நான் போகவும் விடமாட்டேன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ஹாஸ்டேக்கில் கோபி சார் எனவும் அதில் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
அதன்பிறகு நடிகர் சதீஷ் வெளியிட்ட ஒரு பதிவில், பேசி தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் இல்லை எவ்ளோ பெரிய பிரச்னைனாலும் நம்ம நண்பர்களுடன் நமக்கு வேண்டப்பட்டவங்களோடு உட்கார்ந்து பேசினா நிச்சயம் தீர்வு கிடைக்கும். உங்களுக்குப் புரியுதா நான் என்ன சொல்ல வர்றேன்னு?’ என ஒரு வீடியோவில் பேசியிருந்தார். தொடர்ந்து வெளியிட்ட மற்றொரு வீடியோவில்,` பாக்கியலட்சுமி தொடரிலிருந்து நான் விலகுறேன்னு சொன்னதும் இன்பாக்ஸில் நிறைய பேர் போகாதீங்கன்னு சொல்லி நிறைய வேண்டுகோள்கள் அனுப்பியிருக்கீங்க. அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும், உங்க அன்புக்கும் ரொம்ப நன்றி.
என்னால முடிஞ்ச அளவுக்கு உங்க எல்லாருக்கும் ரிப்ளை பண்ணிட்டு இருக்கேன். ஷூட்டிங் பிஸியா போயிட்டு இருக்கு அதனால பலருக்கு ரிப்ளை அனுப்ப முடியல.. ஃப்ரீயானதும் கண்டிப்பா அனுப்புறேன்’ எனக் கூறியிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“