விஜய் டிவியின் மகாநதி சீரியலில் நடித்து வந்த நடிகை பிரதீபா திடீரென அந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நடிகை திவ்யா கணேஷ் கமிட் ஆகியுள்ளார்.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று மகாநதி. பருத்தி வீரன் சரவணன் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த இந்த சீரியல் அப்பா மகள் பாசத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. கதையில் மட்டுமல்லாமல் நடிகர் நடிகைகள் மாற்றத்திலும் திருப்பம் உள்ளது என்று சொல்லலாம்.
இந்த சீரியலில் காவேரி கேரக்டர் நிதின் என்பவரை காதலித்த நிலையில், எதிர்பாராத விதமாக இருவரும் பிரிந்து பின்னர் ஒரு வருட கான்ராக்டுடன் காவேரி விஜய்யை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் எளிமையாக நடைபெற்றதால், வீட்டார்கள் வரவேற்பு வைக்கப்படும்போது, காவேரியை காதலித்த நிதின் தங்கள் எடுத்துக்கொண்ட போட்டோ வீடியோக்களை காட்டி பிரச்சனையை ஏற்படுத்திவிட்டார்.
ஆனாலும் கான்ட்ராக்ட் விவகாரம் யாருக்கும் தெரிந்துவிட கூடாது என்பதால், விஜய் நிதினை விரட்டி அடிக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரயிலில் கங்கா கேரக்டரில் நடித்து வந்த நடிகை பிரதீபா திடீரேன சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது விலகல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் தற்போது அவருக்கு பதிலாக பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் நடித்து வரும் நடிகை திவ்யா கணேஷ் நடித்துள்ளார்.
திவ்யா கணேஷ் காட்சிகள் இன்று முதல் ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் மருமகள் ஜெனி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற திவ்யா கணேஷ் தற்போது கங்கா கேரக்டரிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“