Advertisment

கோபி- ராதிகாவுக்கு எதிராக போராட்டம்: விஜய் டி.வி கலாட்டா

சீரியல் நட்சத்திரங்களுடன் ராஜூ பேசிக்கொண்டிருக்கும்போது சிலர் நீதி வேண்டும் நீதி வேண்டும் பாக்யாவுக்கு நீதி வேண்டும் என்று போராட்டம் செய்கினறனர்.

author-image
WebDesk
New Update
கோபி- ராதிகாவுக்கு எதிராக போராட்டம்: விஜய் டி.வி கலாட்டா

சின்னத்திரையில் புதிதாக ரியாலிட்டி ஷோக்கள் நடத்தி வெற்றி காண்பதில் விஜய் டிவிக்கு நிகர் இல்லை என்று சொல்லாம். பாடல் காமெடி சீரியல் என அனைத்திலும் ரசிகர்களின் ரசனைக்கேற்ப வழங்குவதில் கைதேர்ந்த விஜய் டிவியில் தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள நிகழ்ச்சி ராஜூ வூட்ல பார்ட்டி.

Advertisment

பிக்பாஸ் சீசன் 5-ல் சாம்பியனான ராஜூ மற்றும் 2-வது சாம்பியன் பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில், காமெடி கலைஞர்களுடன் சேர்த்து டிவி சீரியல் நட்சத்திரங்களை அழைத்து அவர்களுடன் சுவாரஸ்யமாக பல கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை வைரலாக்கி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே நடிகை அமலாபால், ரேஷ்மா, கேப்ரியல்லா உள்ளிட்ட பல நடிகைகள் பங்கேற்ற நிலையில், தற்போது புதிதாக பாக்கியலட்சுமி சீரியல் நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

இதில் சீரியல் நட்சத்திரங்களுடன் ராஜூ பேசிக்கொண்டிருக்கும்போது சிலர் நீதி வேண்டும் நீதி வேண்டும் பாக்யாவுக்கு நீதி வேண்டும் என்று போராட்டம் செய்கினறனர். அப்போது ராஜூ இது குறித்து அவர்களிடம் கேட்கும்போது ராதிகாவை ரத்து செய்யும்வரை போராடுவோம் என்று ஒருவர் சொல்கிறார்..

மேலும் பாக்கியலட்சுமி சீரியல் குறித்து ரசிகர்கள் மற்றும் தொகுப்பாளர் கேட்கும் கேள்விகளுக்கு பாக்யா ராதிகா மற்றும் எழில் கேரக்ரில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் பதில் கூறி வருகின்றனர் இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial Vijay Tv Serial 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment