Advertisment

கிரிக்கெட் வீரர் பதிரனா மீது கிரஷ்? பாக்கியலட்சுமி சீரியல் இனியா போட்ட வீடியோ

நேஹா தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதீஷா பதிரானா பந்துவீசும் வீடியோவை ரொமான்டிக் பாடலுடன் பகிர்ந்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Neha

நடிகை நேஹா

சீரியல் நடிகை நேஹா சிஎஸ்கே வீரர் பதிரானா பந்துவீசும் வீடியோவை ரொமான்டிக் பாடலுடன் பகிர்ந்தது இணையத்தில் பெரும் வைரலாக பரவிய நிலையில் நேஹா பதிரானாவை காதலிப்பதாக இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Advertisment

சின்னத்திரையில், ராதிகாவின் வாணி ராணி தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர் நேஹா. தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ள இவர், சத்யராஜூவுடன் இணைந்து ஜாக்சன் துரை படத்தில் தைரியமாக போராளியாக நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும் தற்போது கல்லூரி படிப்பை முடித்துவிட்ட நேஹா பாக்கியலட்சுமி தொடரில் இனியா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

நிஜத்தில் கல்லூரி படிப்பை முடித்துள்ள நேஹா பாக்கியலட்சுமி தொடரில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியாக நடித்து வருகிறார். இந்த தொடரில் அம்மா பக்கமா அல்லது அப்பா பக்கமாக என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தாலும் சீரியலில் இனியா கேரக்டருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நேஹா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதில் நேஹா அவ்வப்போது நெட்டிசன்கள் பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்தாலும் அந்த விமர்சனங்களுக்கு போல்டாக பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் நேஹா தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதீஷா பதிரானா பந்துவீசும் வீடியோவை ரொமான்டிக் பாடலுடன் பகிர்ந்திருந்தார்.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகளை பரப்பி விட்டனர். இது குறித்து விளக்கம் அளித்த நேஹா ஒரு போட்டோ வெளியிட்டதுக்கு இப்படியா வதந்தி பரப்புவீங்க.. சிரிக்கிறதா அழுவுறதானு கூட தெரியல வொர்ஸ்ட் பிஹேவியர் என்று கூறியுள்ளார். நேஹாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment