பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நடிகை சுசித்ரா பேட்டி கேட்டு வந்த தொகுப்பாளர் ஒருவரிடம் கோபப்பட்டு சத்தம் போட்ட வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாக்கியலட்சுமி. குடும்ப உறவுகளை மையப்படுத்தி வெளியாகியுள்ள இந்த சீரிலில் பாக்யா கேரக்ரில் சுசித்ரா, கோபி கேரக்டரில் சதீஷ் ஆகியோர் நடித்து வருகின்றனார். இதில் பாக்யாவை விட்டு தனது முன்னாள் காதலியான ராதிகாவை கோபி திருமணம் செய்துகொண்டார்.
தற்போது ராதிகாவின் ஆபீஸில் பாக்யா கேண்டீன் காண்ட்ராக்ட் எடுத்து வாழ்க்கையில் ஒரு பிஸினஸ் வுமனாக வளர்ந்து வருகிறார். இவருக்கு ராதிகா அவ்வப்போது சிக்கல்கள் கொடுத்தாலும் அதை கடந்து பாக்யா ஆக்ஷனில் இறங்கியுள்ளார். இதனால் கோபியின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே தன்னிடம் பேட்டி கேட்டு வந்த தொகுப்பாளினி ஒருவரிடம் பாக்யா கேரக்டரில் நடித்து வரும் சுசித்ரா கோபப்பட்டு பேசும் சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. இதில் அந்த தொகுப்பாளி உங்கள் நல்லதுக்காகத்தான் வந்திருக்கிறோம் உங்களுக்கே தெரியாமல் டைவர்ஸ் வாங்கிட்டாங்க இதற்கு நியாயம் கேட்க வேண்டும் என்று சொல்கிறார்.
ரோட்ல போறவங்க யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு நல்லது பண்ண எங்கள வீட்ல நிறைய பேர் இருக்காக நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க என்று சுசித்ரா சத்தம் போடுகிறார். அதன்பிறகு தான் இது நடிப்பு என்பது தெரிகிறது. அடுத்து அவர்கள் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“