/tamil-ie/media/media_files/uploads/2021/12/Suchitha.jpg)
Baakiyalakshmi Suchithra Stylish Look Update : விறுவிறுப்பாக சீரியலுக்கு புகழ்பெற்ற விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் பாக்கயலட்சுமி. இல்லத்தரசி ஒருவரின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது.
தினசரி எபிசோடுகள் பரபரப்பரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாத இந்த சீரியல் பெங்காலியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்ரீமொய் என்ற சீரியலின் ரீமேக்காகும். இரண்டு மொழிகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலுக்கு, லீனா மற்றும் சங்கிதா என்ற இருவர் கதை மற்றும் திரைக்கதை அமைத்துள்ளனர்.
இந்த தொடரின் மூலம் ஏராளமான இல்லத்தரசிகளின் நெஞ்சங்களில் குடிபுகுந்தவர் சுசித்ரா. பாக்யலட்சுமி என்ற மெயின் ரோலில் நடித்து வரும்இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். தற்போது விஜய்டிவியின் ஸ்டார்ட் மியூசிக் 3-வது சீசன் அரங்கேறி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுசித்ரா கூலிங் கிளாஸ் மாடர்ன் உடைஎன பார்க்கவே செம்ம ஸ்டைலிஷான லுக்கில் உள்ளார். சீரியலில் இவரை சேலையியே பார்த்த ரசிகர்களக்கு இந்த மாடர்ன் உடை ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த புகைப்படத்தில் ரசிகர்கள் ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகினறனர். அதில் ஒரு சிலர் பாக்ய அம்மாவுக்கு சேலைதான் அழகு என்று கூறி வருகினறனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.