Baakiyalakshmi Serial Update In Tamil : விஜய டிவியில் ஒளிபரபபாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. பல சீரியல்களுக்கு மத்தியில் விஜய் டிவியின் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் பாக்யலட்சுமி சீரியல் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். இதற்கு முக்கிய காரணம். அப்பாவியான ஒரு இல்லத்தரசியின் வாழ்வியலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்படுள்ளதே ஆகும்.
இதில் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு என்ன வேண்டும் என்பதை பார்த்து பார்த்து செய்யும் பாக்யா, தனது வாழ்வில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று துடிப்புடன் பணியாற்றி வருகிறார். ஆனால் அவரது கணவர் கோபி வீட்டிற்கு தெரியாமல், தனது பள்ளி தோழியுடன் சுற்றி திரிகிறார். இதில் கோபியின் பள்ளித்தோழி பாக்யாவின் நெருங்கிய தோழியாக உள்ளதால், கோபி எப்போது வீட்டில் மாட்டிக்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி இருந்தது.
இந்த எதிர்பார்ப்பை பூர்த்த செய்யும் வகையில் கடந்த வாரம் ராதிகாவுடன் கோவிலுக்கு சென்ற கோபியை அவரது அப்பா பார்த்துவிடுகிறார். இது குறித்து கோபியிடம் கேட்கும்போது அவர் ஏதே சொல்லி மழுப்புகிறார். ஆனால் கடுமையாக பேசும் அவரது அப்பா எச்சரிக்கை செய்துவிட்டு செல்கிறார். அதன்பிறகு ராதிகா வீட்டிற்கு சாப்பாடு கொடுக்க செல்லும் பாக்யாவை தடுக்கும் கோபியின் அப்பா தான் சென்று கொடுத்து வருவதாக சொல்லி கிளம்புகிறார்.
அங்கு ராதிகாவிடம் தன்மையாக பேசும் கோபியின் அப்பா கோவிலில் அவளுடன் இருந்தது யார் என்பது குறித்து கேட்கிறார். அப்போது ராதிகா சொல்லும் பதிலை வைத்து ராதிகாவிற்கு, கோபி பாக்யாவின் கணவர் என்பதை தெரியாது என்பதை அறிந்துகொள்கிறார். இதன்பிறகு கோபியின் அப்பா ராதிகாவிடம் உண்மையை சொல்வாரா அல்லது கோபியை எச்சரிக்கை செய்ததுடன் விட்டுவிடுவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், உண்மை தெரிநதால் ராதிகாவின் நிலை என்னவாக இருக்கும் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வேளை கோபியை பற்றி உண்மையை தெரிந்துகொண்டால் ராதிகா கோபியை பழி வாங்குவாரா?, அல்லது மயூ கோபியிடம் நெருங்கி பழகி வருவதால், விவாகரத்து முடிந்தவுடன் கோபியை 2-வது திருமணம் செய்துகொள்வரா? அப்படி நடந்தால் பாகியாவின் நிலை என்ன? ராதிகா பாக்யா இருவருக்குள்ளும் மோதல் ஏற்படுமா? ராதிகா தனது வில்லத்தனத்தை காண்பிப்பாரா என்ற அடுக்கடுக்கான கேள்விகளுடன் பாக்கியலட்சுமி மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ராதிகா ரோலில் நடித்து வந்த நடிகை நந்திதா ஜெனிபர் திடீரென சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து பிக்பாஸ் 3-வது சீசனில் பங்கேற்ற நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ராதிகாவாக நடித்து வருகிறார். மேலும் ஜெனிபர் விலகும்போது ராதிகா கதாப்பாத்திரம் வில்லத்தனமாக மாறப்பபோவதாகவும் அதனால் தான் சீரியலில் இருந்து விலகியதாகவும் கூறியிருந்தார். இதை வைத்து பார்க்கும்போது ராதிகா வில்லியாக மாறப்பபோவது நிச்சயம். ஆனால் அந்த வில்லத்தனம் கோபிக்கா... பாக்யாவுக்கா என்பது விரைவில் தெரியவரும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil