/indian-express-tamil/media/media_files/O1dBeFHaRwbyjMI7GSNh.jpg)
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சீரயலின் இன்றைய எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்
பாக்யா பொருட்காட்சியில் கேண்டீனை பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக நடத்தி வரும் நிலையில், கோபி கிரெடிட் கார்டு பில் கட்ட முடியாமல் ராதிகாவிடம் மாட்டிக்கொண்டார். இதனிடையே இன்றைய எபிசோட்டில், பொருட்காட்சியில் பாக்யா கேண்டீனின் கடைசி நாள் வருகிறது. இதை வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லி சந்தோஷப்படும் பாக்யா அனைவருக்கும் கேசரி செய்து கொடுக்கிறாள்.
இதில் ஈஸ்வரி எந்த பேச்சும் பேசாமல் இருக்க நாளை கேண்டீன் கடைசி நாள் நீங்கள் வாங்க என்று பாக்யா சொல்ல, நான் வர முடியாது பாக்யா எனக்கு கால் வலி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறாள். இதை பார்த்த ராமமூர்த்தி அவ கெடக்குறாம்மா நாங்க எல்லாரும் வற்றோம் என்று சொல்கிறார். மறுநாள் கேண்டீனில் வியாபாரம் சிறப்பாக நடக்க, பழனிச்சாமி அங்கே என்ட்ரி ஆகிறார்.
அப்போது அமைச்சர் பாக்யாவின் கேண்டீனை பாராட்டி மாலை அணிவித்து பாராட்டுகிறார். வீட்டில் கோபியும் ஈஸ்வரியும் அமர்ந்திருக்கும்போது அவசரமாக அங்கே வரும் செழியன் டிவியை போட்டு பார்க்க சொல்ல, ஈஸ்வரி டிவி பார்க்கும்போது அமைச்சர் பாக்யாவுக்கு மாலை போடுகிறார். இதை பார்த்து ஈஸ்வரி ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். ஆனால் அருகில் உள்ள கோபி கடுப்பாகிறார்.
இந்த வீடியோவாக எடுத்து செழியன் ஜெனிக்கு அனுப்ப அவள் பார்த்துவிட்டு பாக்யாவுக்கு வாழ்த்து சொல்லும் வகையில் செழியன் போனுக்கே மெசேஜ் அனுப்புகிறாள் இதை பார்த்து செழியன் சந்தோஷமடைகிறார். அதன்பிறகு பாக்யா அனைவருடனும் பேசிக்கொண்டிருக்க அங்கு கணேஷ் என்டரி ஆகிறான். இவனை பார்த்து அதிர்ச்சியாகும் பாக்யா உடனடியாக எழில் அமிர்தாவை அங்கிருந்து கிளம்ப சொல்கிறார்.
அதன்பிறகு பாக்யா அருகில் வரும் கணேஷ் வாழ்த்துக்கள் மேடம், நியூஸ் பார்த்துட்டு தான் இங்கே வருகிறேன். அப்புறம் உங்களுக்கு நான் கொடுத்த டைம்ல இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு என வார்னிங் கொடுத்துவிட்டு கிளம்புகிறான் அத்துடன் எபிசோடு முடிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us