விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சீரியலின் தினசரி எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பொருட்காட்சி நடைபெறுமா என்ற சந்தேகத்துடன் இருந்த பாக்யாவுக்கு புது நம்பிக்கை அளிக்கும் தகவல் கிடைத்துள்ளது, அரும்பாடு பட்டு பொருட்காட்சி காண்ட்ராக்டை பெற்றுள்ள பாக்யா இதன் மூலம் தனது பணப்பிரச்சனையை தீர்த்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கூடுதலாக 50 ஆயிரம் கொடுப்பதாகவும் பொருட்காட்சி காண்ட்ராக்டை தனக்கே கொடுத்துவிடும்படி சொல்ல, ஈஸ்வரியும் அதற்கு ஓகே சொல் என்று பாக்யாவிடம் கூறுகிறார்.
ஆனால் பாக்யா சமையல் ஆர்டரை கொடுப்பதாக இல்லை. நான் தான் செய்யப்போகிறேன் என்று ஈஸ்வரிக்கு பாக்யா பதில் சொல்ல அவளுக்கு சப்போட்டாக எழில், ராமமூர்த்தி இருவரும் கிளம்பி செல்கின்றனர். இதனால் கடுப்பாகும் ஈஸ்வரி உனக்கு சொல் புத்தியும் கிடையாது சுய புத்தியும் கிடையாது. என்னமோ பண்ணித்தொலை என்று சொல்லிவிட்டு செல்கிறார். அதன்பிறகு அனைவரும் பொருட்காட்சியை பார்வையிடுகின்றனர்.
அதன்பிறகு என்ன சமையல் செய்யலாம் என்று பட்டியல் போடும் பாக்யா, ஆர்டர் கிடைத்த சந்தோஷத்தை கொண்டாடும் வகையில் வீட்டில் உள்ள அனைவருக்கும் சமைத்து கொடுக்கிறார். இதையெல்லாம் ஏக்கமாக பார்க்கும் கோபி ராதிகாவிடம் இருந்து நமக்கு என்ன சாப்பாடு வருமோ என்று யோசித்துவிட்டு அவளிடம் என்ன சாப்பாடு என்று கேட்க, அவள் ஓட்ஸ் இருப்பதாக சொல் கோபி அதிர்ச்சியாகிறார்.
அதன்பிறகு நாளை பொருட்காட்சி கேண்டீன் ஓப்பனிங் என்று சொல்லி பாக்யா அனைவருக்கும் அழைப்பு கொடுக்கிறாள். ஈஸ்வரியிடம் சொல்லும்போதும் அவள் பேசாமல் இருக்க, அப்போது ராதிகாவை பார்த்து எல்லோரும் வரணும்னு சொல்லித்தான் அழைப்பு கொடுப்பதாக சொல்கிறார் பாக்யா. இதை கேட்ட ராதிகா, எனக்கும் சேர்த்து தான் இந்த அழைப்பா என்று கேட்க எல்லோரும் வந்தால் சந்தோஷப்படுவேன் என்று சொல்கிறார்.
இதை கேட்டு ஈஸ்வரி கோபி இருவரும் கடுப்பாகிறார்கள். அதன்பின்னர் கோபி, சாப்பிடும் போது நீ பாக்யாவுக்கு சப்போர்ட் பண்றது, அவளிடம் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்ல, அப்போ வாங்க நம்ம வீட்டுக்கு போய்டலாம் என்று ராதிகா சொல்கிறார். இதை கேட்டு கோபி அதிர்ச்சியாக, ஒரு வீ்ட்டில் இருந்துகொண்டு என்னால் பேசாமல் இருக்க முடியாது என்று சொல்கிறாள். இதை கேட்ட கோபி வாயடைத்து போக அத்துடன் முடிகிறது எபிசோடு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“