மீண்டும் கோபியை நம்பி பாக்யா… எதிராக திரும்பும் ஈஸ்வரி… அடுத்து என்ன?

லோன் கிடைக்குமா? எழில் நிலைமை என்ன? இனியா ராதிகாவிடம் என்ன செய்யபோகிறார் என்று பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது பாக்கியலட்சுமி

மீண்டும் கோபியை நம்பி பாக்யா… எதிராக திரும்பும் ஈஸ்வரி… அடுத்து என்ன?

விஜய் டிவியின் பாக்கியலட்மி சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளுக்கு நாள் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கோபி இனியாவை அழைத்து சென்றுவிட்ட நிலையில், தாத்தாவும் அங்கும் இங்கும் சென்றுகொண்டிருக்கிறார் இதனிடையே அமிர்தாவை பார்க்க கூடாது என்று எழிலிடம் சத்தியம் வாங்கிவிட்டார்.

இது ஒருபுறம் இருக்க கேண்டீன் தொடங்க லோன் கேட்டு பாக்யா பேங்க்க்கு செல்கிறார். அங்கு லோன் கிடைக்குமா எழில் நிலைமை என்ன? இனியா ராதிகாவிடம் என்ன செய்யபோகிறார் என்று பரபரப்பான சென்றுகொண்டிருக்கும் இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் அமிர்தாவிடம் பேச கூடாது என்று சத்தியம் வாங்கி கொள்ளும் பாட்டி ஈஸ்வரி, பாக்யாவிடம் அந்த பெண் இங்கே வரும்போதே நான் சொன்னேன் நீ கேட்கல என்று சொல்லி திட்டிவிட்டு செல்கிறார்.

அதன்பிறகு செல்வி பாக்யா இருவரும் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது காலணி செக்ரட்ரி வம்புக்கு இழுக்கிறார். பெண்கள் தேர்தலில் நின்று ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்ல நான் தேர்தலில் நிற்கவே இல்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். பாக்யா. அதன்பிறகு செழியன் ஜெனிக்கு கால் அமுக்கிவிட்டு இருவரும் என்ன குழந்தை பிறக்கும் என்று பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அடுத்து லோன் கேட்டு பேங்க் செல்லும் பாக்யாவிடம் பேங்க் மேனேஜர் அனைத்து டாக்குமெண்ட்களை வாங்கி பார்த்துவிட்டு உங்க ஹஸ்பெண்ட் பான் கார்டு வேண்டும் என்று சொல்கிறார். இதனால் ஷாக் ஆகும் பாக்யா பிஸினசில் நல்ல லாபம் வருகிறது. என்று சொன்னாலும் அதெல்லம் நான் கேட்கவில்லை. உங்க ஹஸ்பெண்ட் பான் கார்டு தான் கேட்டேன் என்று சொல்ல, நான்லோன் வாங்ககுவதற்கு அவர் பான் கார் எதற்கு என்று கேட்க உங்க விருப்பத்திற்கு லோன் கொடுக்க முடியாது என்று சொல்லிவிடுகிறார்.

இதனால் அமைதியான அங்கிருந்து வீட்டுக்கு வரும் பாக்யா பேங்கில் நடந்ததை சொல்ல, அவர் விவாகரத்து வாங்கிட்டு போய்டாருனு சொல்லவேண்டியதானே என்று எழில் சொல்ல. எல்லாம் முடிஞ்சது என்று பார்த்தால் இப்போதான் அவர பத்தி பேசிட்டு இருக்காங்க என்று பாக்யா சொல்கிறார். இதை கேட்டு பாட்டி இதைத்தான் அப்போவே சொன்னேன். நீதான் கேட்கல டைவர்ஸ் கொடுத்துட்ட என்று சொல்லிவிட்டு லோனும் வேண்டாம் கேண்டீனும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு செல்கிறார் அத்துடன் எபிசோடு முடிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial baakiyalakshmi episode update in tamil on dec 6th

Exit mobile version