New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/GOPI.jpg)
பாக்கியலட்சுமி கோபி
பாக்கியலட்சுமி கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ் தற்போது வித்தியாசமான கெட்டப்பில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் சதீஷ். அவரது காமெடி கலந்த வில்லத்தனத்திற்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரது நடிப்பை பார்த்து ஒரு சிலர் அவரை மிகவும் தரக்குறைவாக வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தும் வருகின்றனர்
அதே சமயம் அவரக்கான ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், தன்னை ரசிக்கும் ரசிகர்களை நடிகர் சதீஷ் எப்போதும் உயர்வாகவே பேசி வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகர் சதீஷ் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது தனது 2-வது மனைவி ராதிகாவுடன் மீண்டும் பாக்யா வீட்டில் குடியேறியுள்ள கோபி, செழியன் மற்றும் எழில் தொடர்பான பிரச்சனைகளை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார். அதே போல் கேண்டீன் போய் வேலை இல்லாமல் இருக்கும் பாக்யா அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பிக்கொண்டிருக்க இப்போது ஒரு கோவில் காண்டராக்ட் கிடைக்கிறது.
இதனிடையே தற்போது பாக்யா வீட்டில் இருக்கும் கோபி தனது அப்பா போலவே பணியன் துண்டு, நெற்றியில் திருநீரு பூசிக்கொண்டு கயில் பகவத் கீதை புத்தகத்தை வைத்துதிருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பதிவில் என்ன பாக்குறீங்க, ராமமூர்த்தி ஜூனியர் இப்போ நானும் தாத்தா தானே இது எப்படி இருக்கு என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.