Advertisment

பாக்கியலட்சுமி வில்லன் கோபியை அழிக்க சதி? இன்ஸ்டாவில் ஷாக் வீடியோ

பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் சதீஷின் காமெடி கலந்த வில்லத்தனத்திற்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

author-image
WebDesk
New Update
90'sல் சினிமா என்ட்ரி.. இப்போ 2K's ஃபேவரைட் சீரியல் ஆக்டர்.. பாக்கியலட்சுமி கோபி லைஃப் ட்ராவல்..

பாக்கியலட்சுமி சீரியல் கோபி

என்னை அழிக்க சிலபேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பிரபல சீரியல் நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள வீடியே பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisment

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் சதீஷ். அவரது காமெடி கலந்த வில்லத்தனத்திற்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரது நடிப்பை பார்த்து ஒரு சிலர் அவரை மிகவும் தரக்குறைவாக வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தும் வருகின்றனர்

அதே சமயம் அவரக்கான ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், தன்னை ரசிக்கும் ரசிகர்களை நடிகர் சதீஷ் எப்போதும் உயர்வாகவே பேசி வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகர் சதீஷ் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில் தான் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலக உள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் நீங்கள் தொடர்ந்து சீரியலில் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் தான் சீரியலில் தொடர்ந்து நடிப்பதாக அறிவித்திருந்தார். இதனிடையே தற்போது தான் நடித்த மலையாளம் சீரியல் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் சதீஷ்,

நான் மிகவும் ஆசையுடனும், பெரும் எதிர்பார்ப்புடனும் நடிக்க ஒப்புக்கொண்ட ரோல்.ஆனால் எதிர்பார்ப்புகள் பெரும் ஏமாற்றத்தில் தான் முடியும் என்ற பாடத்தை வாழ்க்கை மீண்டும் எனக்கு கற்பித்துள்ளது. நாம் சிப்பாக என்னதான் செய்தாலும் அதை அழிக்க சிலபேர் காத்துக் கொண்டிருப்பார்கள். நண்பர்களே இதுதான் உண்மை வாழ்க்கையின் தத்துவம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நடிகர் சதீஷ் ஏன் அப்படி சொன்னார் என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அவரது பதிவுக்கு தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Baakiyalakshmi Serial Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment