விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், கடந்த இரு தினங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் சற்று பின்னடைவை வந்தித்து வருகிறது. பாக்யா கோபி ராதிகா என்ற 3 பிரதான கேரக்டர்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் திருமணத்திற்கு மீறிய உறவு எவ்வித பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது.
பாக்யவுடன் வாழ்ந்து வந்த கோபி 3 குழந்தைகளுக்கு தந்தை என்பதை மறந்து தனது முன்னாள் காதலியான ராதிகாவுடன் பழகி, பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். சந்தோஷத்தை மனதில் வைத்து திருமணம் செய்துகொண்ட கோபிக்கு 2-வது திருமணம் மோசமாக அனுபவத்தை கொடுத்துள்ளது. இதனால் மனஉளைச்சலில் சிக்கி தவிக்கிறார் கோபி
இந்த பக்கம் கோபி போன பிறகு சமையலில் அசத்தும் பாக்யா, காண்ராக்ட், கேண்டீன், சமையல் ஆர்டர், ஆங்கில வகுப்பு, தற்போது கல்லூரி படிப்பு என அடுத்தடுத்து முன்னேற்ற பாதையில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறார். பாக்யாவின் முன்னேற்றத்தை பொறுத்துக்கொள்ள முடியாத கோபி அவருக்கு பல வழிகளில் தொல்லை கொடுப்பதும், இதற்காக ராதிகாவின் கோபத்திற்கு ஆளாகி வருவதுமாக இருக்கிறார்.
இதனிடையே ஆங்கில வகுப்பில் தன்னுடன் படிக்கும் பழனிச்சாமியிடம் நண்பராக பழகி வரும் பாக்யாவை அவருடன் சம்பந்தப்படுத்தி பேசுவதும், இது குறித்து பழனிச்சாமியின் அம்மாவிடம் சென்று சண்டை போடுவதும் என தொடர்ந்து பரபரப்பை கிளப்பி வருகிறார் கோபி. தொடர்ந்து இனியா படிக்கும் அதே கல்லூரியில் பாக்யாவும் படிப்பதால் அவரை கல்லூரியில் இருந்து நிறுத்துவதற்காக இனியாவிடம் மூட்டிவிடுகிறார் கோபி.
கோபியின் பேச்சை கேட்டு பாக்யாவிடம் பேசும் இனியா, ஏன் இப்படி பல வேலைகளை செய்து கஷ்டப்படுகிறாய் கல்லூரியில் இருந்து நின்றுவிடலாமே என்று இனியா சொல்ல, கோபியின் பேச்சை கேட்டு தான் இனியா இப்படி பேசுகிறார் என்று புரிந்துகொள்ளும் பாக்யா தான் கல்லூரியில் சேர்ந்ததில் உள்ள ஞாயத்தை பற்றி எடுத்து கூறுகிறார்.
என்னுடைய கல்லூரி கனவு நியாயமானது அதனால் யாருக்கும் பாதிப்பில்லை, கோபி, தன்னுடைய கல்லூரி கால காதலியை திருமணம் செய்துகொண்டதால் அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நான் என்னுடைய இளமை காலத்தில் தான் படிக்கத் தவறிய கல்லூரி படிப்பை தற்போது படிப்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி இனியாவுக்கு பாக்யா புரிய வைக்கிறார் அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”