விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜனவரி 10-ந் தேதி இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், டான்ஸ் ஷோவில் கலந்துகொள்வதறகாக இனியா மேக்கப் பொருட்களை டெஸ்ட் செய்து பார்த்துக்கொண்டு இருக்கிறாள். அப்போது கிச்சனில் இருக்கும் செல்வி, இனியா என்ன பண்ணுது என்ற கேட்க, டான்ஸ்க்கு என்ன மேக்கப் போடலாம் என்ற பார்த்துக்கொண்டிருப்பதாக சொல்கிறாள். கொஞ்ச நேரத்தில் போன் வந்ததும், எல்லாவற்றையும் அப்படியே வைத்துவிட்டு இனியா போன் பேச போகிறாள்.
பாக்யாவும் செல்வியம் பரன்மேல் இருக்கும் பொருட்களை எடுக்க சென்றவிட, அப்போது அங்கு வரும் மயூ, மேக்கப் பொருட்களை எடுத்து போட்டு பார்த்துக்கொண்டிருக்க, அங்கு வரும் இனியா, யாரை கேட்டு இதெல்லாம் எடுத்த, அடுத்தவங்க பொருள்ளை கேட்டு எடுக்கனும்னு தெரியாதா? டெஸ்ட் பண்ணது டெஸ்ட் பண்ணாதது என தனியாக பிரித்த்து வைத்திருந்தேன் என்று சொல்ல, அப்போது ஈஸ்வரி அங்கு வந்து மயூவை திட்டுகிறாள். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரம் அங்கு வந்துவிடுகின்றனர்.
அப்போது ஈஸ்வரி, மயூ மேக்கப் பொருட்களை உடைத்துவிட்டதாக சொல்ல, இனியா அதிர்சசியாகிறாள். ஆனால் மயூ நான் அப்பாயெல்லாம் பண்ணல. எடுத்த இடத்திலேயே எல்லாவற்றையும் வைத்துவிட்டேன் என்ற சொல்ல, பாக்யா இனியாவிடம் விசாரிக்கிறாள். அப்போது இனியா நடந்ததை சொல்ல, நீ மயூவை திட்டுனியா என்ற பாக்யா கேட்கிறாள். அப்போது இல்லம்மா ஒருத்தர் யூஸ் பண்ணதை இன்னொருவர் எப்படி யூஸ் பண்றது என்றதான் கேட்டேன் என்ற இனியா சொல்கிறாள்.
இதை கேட்ட பாக்யா, நீ ஜெனி மேக்கப் பொருளை பயன்படுத்தியதே இல்லையா என்ற கேட்க, பயன்படுத்தி இருக்கிறேன் என்ற இனியா சொல்ல, நீ அடுத்தவங்க பொருளை பயன்படுததலாம். ஆனால் உன் பொருளை யாரும் பயன்படுத்தினால் நீ பயன்படுத்தமாட்டியா என்று கேட்டுவிட்டு, மயூவிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறாள். அதன்பிறகு ராதிகா மயூவை கூப்பிட்டு, கேட்டு எடுக்க வேண்டும் என்று தெரியாதா? எதாவது வேண்டும் என்றால் என்னிடம் கேளுன சொல்லிருக்கேன்ல என்ற சொல்ல. இங்க பெரியவங்களே புரிஞ்சிக்கல, நீங்க ஏன் குழந்தையை திட்டுறீங்க என்று கேட்கிறாள்.
இதை கேட்ட ஈஸ்வரி நீ என்னை தானே சொல்ற என்று கேட்க, நான் அப்படி சொல்லவில்லை. நீங்கள் யாருக்கோ போன் பண்ணணும்னு சென்னீங்களே என்ற சொல்லி, அவளை அனுப்பி வைக்கிறாள். அடுத்து டிவி பார்க்க வரும் ராதிகா சவுண்டடை அதிகமாக வைக்க. அங்கு வரும் ஈஸவரி திட்டுகிறாள். இதற்க ராதிகாவும் எதிர்த்து பேச அங்கு மோதல் அதிகமகிறது. அப்போது கோபி வந்து ரிமோட் ரிப்பேர் என்று சொல்லி சமாளிக்க, அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.