மீண்டும் ரெட் கார்டு கொடுத்த ராதிகா... ஆனா கோபி என்னென்ன சொல்றார் பாருங்க

ராதிகா, டீச்சர் தான் உங்க வொய்ப்னு தெரிஞ்சிருந்தா இந்த பிரச்சினை இவ்ளோ தூரம் வந்திருக்காது உங்களை டைவர்ஸ் வாங்க விட்ருக்கவே மாட்டேன்.

ராதிகா, டீச்சர் தான் உங்க வொய்ப்னு தெரிஞ்சிருந்தா இந்த பிரச்சினை இவ்ளோ தூரம் வந்திருக்காது உங்களை டைவர்ஸ் வாங்க விட்ருக்கவே மாட்டேன்.

author-image
WebDesk
New Update
மீண்டும் ரெட் கார்டு கொடுத்த ராதிகா... ஆனா கோபி என்னென்ன சொல்றார் பாருங்க

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோபியை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் ராதிகா நடந்துகொள்வது கோபிக்கு மேலும் ஷாக்காக உள்ளது.

Advertisment

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. கதையின் முக்கிய முடிச்சு அவிழ்ந்த நிலையிலும், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையால் முன்னனி சீரியலாக ஒளிப்பரப்பாகி வருகிறது. ரசிகர் இந்த சீரியலுக்கு அளித்து வரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கதையில் தன்னுடைய தோழி ராதிகாதான், தன் கணவன் கோபியின் காதலி என தெரிய வர, துடித்துப்போகும் பாக்யா, டைவர்ஸ் கேட்கிறார். இதனால், இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் வந்துக் கொண்டு இருக்கிறது. பின்னர் கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார் பாக்யா. தற்போது இது தொடர்பான காட்சிகள் ஒளிப்பரப்பாகி வருகின்றன

இந்நிலையில், விஜய் டிவி வெளியிட்டு இருக்கும் புதிய ப்ரோமா தற்போது எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்த ப்ரமோவில் கோபியிடம் பேசும் ராதிகா, டீச்சர் தான் உங்க வொய்ப்னு தெரிஞ்சிருந்தா இந்த பிரச்சினை இவ்ளோ தூரம் வந்திருக்காது உங்களை டைவர்ஸ் வாங்க விட்ருக்கவே மாட்டேன். நீங்களும் வீட்டை விட்டு வெளியே வந்திருக்க மாட்டீங்க என்று சொல்கிறார்.

Advertisment
Advertisements

இதை கேட்டு கோபி, நிறுத்து ராதிகா எப்போ பாரு டீச்சர் டீச்சர்னு அவள பத்தியே பேசிட்டு இருக்க என்னைபற்றி யோசிக்கவே மாட்டீயா. உனக்குதான் அவ டீச்சர் ஆன என்னை பொறுத்தவரைக்கும் அவர் டார்ச்சர். ஒவ்வொரு ஆம்பிளைக்கும் தன் மனைவி குறித்து ஒரு கனவு இருக்கும் பெண்களுக்கு அதை விட அதிகமாக இருக்கும் என்று கூறி ராதிகா யோசிக்க தொடங்குகிறார்.

இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அடுத்து என்ன நடக்கும், கோபி ராதிகாவை திருமணம் செய்துகொள்வரா அல்லது மீண்டும் கோபி பாக்யாவுடன் சேருவாரா என்ற எதிர்பார்ப்’பு அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: