தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Advertisment
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. குடும்ப உறவுகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், பாக்கியா கோபி, ராதிகா இந்த 3 கேரக்டர்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பாக்யாவின் கணவரான கோபி 3 பிள்ளைகளுக்கு அப்பா என்பதை மறந்து பாக்யாவை டைவர்ஸ் செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்துகொண்டார்.
அதன்பிறகு பாக்யா அதிரடியாக கேட்ரிங், கேண்டீன் மசாலா கம்பெனி என தொடங்கி பிஸினசில் அசத்தி வருகிறார். மறுபக்கம் கோபி ராதிகாவிடம் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார். கோபி வில்லன் என்றாலும் அவ்வப்போது அவர் வில்லனத்தனுடன் செய்யும் காமெடி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் சமீபத்தில் அவர் செய்த சூழ்ச்சி பாக்யாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இனியா ஈஸ்வரி மற்றும் செல்வியுடன் கேரளா டூர் சென்ற பாக்யா, திரும்பி வரும்போது ஒரு விபத்தில் சிக்கி பெரும் பிரச்சனையாகி வருகிறது. அவரது லைசன்சும் தொலைந்து போனதால் வீட்டில் உள்ள லைசன்சை கேட்கிறார். இதை தெரிந்துகொண்ட கோபி, அப்பாவும் அமிர்தாவும் வருவதற்கு முதன்பாக பாக்யாவின் வீட்டிற்கு சென்று தன்னிடம் வைத்திருக்கும் ஒரு சாவியை பயன்படுத்தி உள்ளே சென்று பாக்யாவின் லைசன்ஸை திருடிவிட்டார்.
அதன்பிறகு ஒரு ஹோட்டலில் அந்த லைசன்ஸை உடைத்து போட அதை பழனிச்சாமி எடுத்து பாக்யாவுக்கு அனுப்பி விட அப்போது போலீசார் அதை ஏற்று்ககொண்டு பாக்யாவை விட்டுவிடுகின்றனர். இப்போது வீடு திரும்பிய பாக்யாவுக்கு கோபி தான் லைசன்ஸை திருடினார் என்று எழில் மூலமாக தெரியவந்துவிடுகிறது. இதை கேட்டு ஆத்திரமடைந்த பாக்யா உடனடியாக கோபியின் வீட்டுக்கு சென்று கதவை தட்டுகிறார்.
லேப்டாப்பில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ராதிகா கதவை திறந்து பார்த்தால் பாக்யா இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், ராதிகா வீட்டிற்கு பாக்யா வந்ததை அதிர்ச்சியுடன் பார்க்கும் கோபியிடம் என் வீட்டு சாவியை கொடுங்கள் என்று பாக்யா அதட்டி கேட்க, ராதிகா வீட்டு சாவியை கொடுக்கிறார். வாங்கிக்கொண்டு போகும் பாக்யா கதவை வேகமாக சாத்திவிட்டு செல்கிறார். இந்த பரமோ தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“