Baakiyalakshmi Serial New Promo : இல்லத்தரசிகளின் குடும்ப வாழ்வியலை தத்ரூபமாக எடுத்து கூறும் சீரியல்களில் பாக்யலட்சுமி சீரியலுக்கு தனி இடம் உண்டு. 3 குழந்தைகள் கணவன் மனைவி மருமகள், மாமனார் மாமியார் என ஒரு அழகான குடும்பத்தில் நடக்கும் பாசப்போராட்டமே இந்த சீரியலின் கதைக்களம். அதேபோல் அழக்கான குடும்பம் என்றாலும் அதில் அழுக்கான ஒரு மனிதர் இருக்கதான் செய்வார் என்று சொல்வதுபோல சீரியலின் நாயகன் கோபி கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Advertisment
3 குழந்தைகள் இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்பாத கோபி,தனது முன்னாள் காதலி ராதிகாவை திருமணம் செய்துகொள்ள தயாராகிவிட்டார். இதற்காக பாக்யாவை ஏமாற்றி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்தும் வாங்கிவிட்டார். இதற்கிடையே பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மாமனாரை பார்த்தக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் பாக்யா அவரது மருத்துவ செலவுக்காக அயராது உழைத்து வருகிறார்.
கடந்த வாரம் முழுவதும் குடும்பத்தின் மூத்த மகன் செழியன் வீட்டிற்கு பணம் கொடுப்பதில்லை என்ற பேச்சை வைத்தே எபிசோடுகள் கடந்துவிட்ட நிலையில், அடுத்த வாரம் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமானது. இந்த எதிர்பார்ப்புக்கு விடை சொல்லும் வகையில் தற்போது பாக்யலட்சுமி சீரியலின் ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் ஈஸ்வரி பாட்டி கோபிக்கு எதிராக திரும்புவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
அப்பாவுக்கு தான் செலவு செய்தது குறித்து பாக்யவிடம் கோபி பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது பாக்யா சத்தமா பேசாதீங்க அத்தை கேட்டுட போறாங்க என்று சொல்ல, ஈஸ்வரி கோபியின் பேச்சை கேட்டுவிடுகிறார். அதன்பிறகு பீரோவில் இருந்து நகை எடுத்து வந்து பாக்யாவிடம் கொடுத்து நீ பணத்துக்காக எவ்ளவோ கஷ்டப்படுற இந்தா இதை வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு கோபியின் முகத்தை கூட பார்க்காமல் திரும்பி விடுகிறார்.
Advertisment
Advertisements
இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில்,பாட்டியின் நடிப்பு சூப்பர் என்று பலரும் கூறி வருகின்றனர். தாத்தா படுக்கையில் இருந்தாலும் அவர் பேச முடியாத குறையை பாட்டி ஈஸ்வரி தீர்த்துவிடுகிறார் என்று கூறி வருகினறனர். அம்மாவின் இந்த மாற்றத்தை பார்க்கும் கோபி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், விவாகரத்து கேஸ் கோர்ட்டுக்கு வரும்போது பாக்யாவுக்கு தெரிந்தால் என்னவாகும் என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil