கோபி கல்யாணம்; சமையல் காண்ட்ராக்ட் எடுத்த பாக்யா; அடுத்து என்ன?
இனியாவின் ஸ்கூல் பீஸ் கட்டிய கோபியின் பணத்தை திரும்ப கொடுக்க ஒரு சமையல் காண்ட்ராக்ட் டெஸ்ட்க்கு செல்லும் பாக்யாவுக்கு ஒரு மேரேஜ் ஹாலில் சமைக்க வாய்ப்பு கிடைக்கிறது.
கடந்த சில வாரங்களாக அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி வரும் பாக்யல்ட்சுமி சீரியல் தற்போது பரபரப்பின் உச்சமாக கோபி ராதிகா திருமணத்திற்கு பாக்யா சமையல் செய்ய உள்ளார்.
Advertisment
தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல் சீரியலின் கதையும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சீரியல் பாக்கியலட்சுமி.
பெண் தனி மனித முன்னேற்றம், ஆணாதிக்கம், திருமணத்திற்கு மீறிய உறவு என பல முக்கிய விஷயங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் தற்போது கோபி, பாக்யா டைவர்ஸ் ஆகிவிட்டது. தைரியமாக கோர்ட்டுக்கு வந்த பாக்யா கோபிக்கு டைவர்ஸ் வழங்குவதாக கூறியதால், வழக்கு சுமுகமாக முடிந்தது.
இதனைத் தொடர்ந்து தனது வீட்டை விட்டு வெளியேறிய கோபி, ராதிகாவை திருமணம் செய்துகொள்ள எவ்வளவோ வற்புறுத்தியும் ராதிகா சம்மதிக்காத நிலையில். ராதிகாவின் அண்ணன் இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். இந்த விஷயம் ராதிகாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு இடையே தற்போது அதிரடி திருப்பம் அரங்கேறியுள்ளது.
இனியாவின் ஸ்கூல் பீஸ் கட்டிய கோபியின் பணத்தை திரும்ப கொடுக்க ஒரு சமையல் காண்ட்ராக்ட் டெஸ்ட்க்கு செல்லும் பாக்யாவுக்கு ஒரு மேரேஜ் ஹாலில் சமைக்க வாய்ப்பு கிடைக்கிறது. இந்த மேரேஜ் ஹாலில் கோபி ராதிகா திருமணம் நடைபெற உள்ளது. ஆனால் இது தெரியாத பாக்யா ஆர்டர் கிடைத்த மகிழ்ச்சியில் சமையல் செய்ய தயாராகிறார்.
இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில். கோபிக்குதான் திருமணம் என்று தெரிந்தால் பாக்யா என்ன செய்வார் தொடர்ந்து சமைப்பாரா அல்லது இந்த காண்ட்ராக்டில் இருந்து வெளியேறுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், பாக்யாவின் கேரக்டர் பரிதாபமான நிலையில் உள்ளதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம். கோபி வெளியில் சென்றாலும் பாக்யா கோபி வீட்டில் ஒவ்வொரு நாளும் பெரிய அவமானத்தை சந்தித்து வருகிறார். இதற்கு பாக்யாவே வெளியில் போய் கோபிக்கு எதிராக வாழ்ந்து காட்டியிருக்கலாம் என்று ஒரு சாரார் கூறி வரும் நிலையில், கோபி ராதிகாவை திருமணம் செய்துகொள்வது தெரிந்தாலும் பாக்யா கணவரை நினைத்து அழுவாரே தவிர அவரது முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
தற்போது கோபியின் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் பாக்யா முயற்சி மேற்கொண்டாலும் முன்னாள் கணவருக்கு சவால் விடும் அளவுக்கு எதுவும் செய்யவில்லை. அவர் செய்ய நினைத்தாலும் ஊக்கம் தர எழிலை தவிர வேறு ஆள் இல் என்பது ரசிகர்களன் புலம்பலாக உள்ளது.