விஜய் டிவியில் தற்போது பரபரப்பின் உச்சத்தில் சென்றுகொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து வரும் எபிசோடுகளுக்கான ப்ரமோ பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல் சீரியலின் கதையும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சீரியல் பாக்கியலட்சுமி.
பெண் தனி மனித முன்னேற்றம், ஆணாதிக்கம், திருமணத்திற்கு மீறிய உறவு என பல முக்கிய விஷயங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் தற்போது கோபி, பாக்யா டைவர்ஸ் ஆகிவிட்டது. அதன்பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய கோபி சில போராட்டத்திற்கு பிறகு ராதிகாவை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளார்.
தற்போது கோபி ராதிகா திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தனக்கு தெரியாமலே கோபியின் திருமணத்திற்கு சமையல் ஆர்டரை பாக்யா பெற்றுள்ளார். இதனால் கதையில் அடுத்து என்ன திருப்பம் அரங்கேறி போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள ப்ரமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த ப்ரமோவில் ராதிகாவிடம் பேசும் கோபி கல்யாணம் பற்றி அம்மாவிடம் ஒரு வார்தை சொல்லாம் என்று சொல்கிறார். ஆனால் ராதிகா தடுக்கவே அதையும் மீறி அம்மாவை கோவிலுக்கு வர சொல்லி பார்க்கும் கோபி நான் ராதிகாவை திருமணம் செய்துகொள்ள போகிறேன் நீங்கள் வந்து ஆசீர்வாதம் பண்ண வேண்டும் என்று சொல்கிறார்.
ஆனால் இதை கேட்டு அதிர்ச்சியாகும் ஈஸ்வரி டேய் என்னை பார்த்தால் எப்படி தெரிகிறது. நீ என்ன கண்டராறி பண்ணாலும் உன் பின்னாடியே வந்துருவேனா? இந்த கல்யாணத்தை நீ எப்படி நடத்துரேனு நானும் பார்க்குறேன்டா என்று சொல்லிவிட்டு செல்கிறார். இதை கேட்டு கோபி அதிர்ச்சியில் உரைய அத்துடன் முடிகிறது ப்ரமோ.
இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil