Vijay Tv Serial: அடடே, என்னா முழி... வில்லி ராதிகா ஆட்டம் ஸ்டார்ட்; பாக்யா ஷாக்

அன்னைக்கு காலணி எலக்ஷன்ல என்ன பேச்சு பேசுனீங்க. படிப்பெல்லாம் ஒரு விஷயமே இல்லனு. இப்போ சொல்ல படிப்புதான் எல்லாத்தையும் தீர்மானிக்குது.

அன்னைக்கு காலணி எலக்ஷன்ல என்ன பேச்சு பேசுனீங்க. படிப்பெல்லாம் ஒரு விஷயமே இல்லனு. இப்போ சொல்ல படிப்புதான் எல்லாத்தையும் தீர்மானிக்குது.

author-image
WebDesk
New Update
Vijay Tv Serial: அடடே, என்னா முழி... வில்லி ராதிகா ஆட்டம் ஸ்டார்ட்; பாக்யா ஷாக்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பாக்யாவுக்கு எதிராக ராதிகா வில்லியாக தனது முதல் படியை எடுத்து வைத்துள்ளார்.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன இந்த சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்ட கோபி, தனது வீட்டுக்கு பக்கத்திலேயே ராதிகாவுடன் குடி வந்துள்ளார்.

தொடர்ந்து இனியாவை தன்பக்கம் இழுத்துக்கொண்ட கோபிக்கு நெருக்கடி கொடுக்க தாத்தாவும் அங்கு சென்று தங்கியுள்ளார். இதனிடையே காலணியில் தேர்தல் வருகிறது. இதில் பாக்யா போட்டியிட அவருக்கு போட்டியாக ராதிகாவை இறக்கி விடுகிறார் கோபி. மேலும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ராதிகா பாக்யாவை தாக்கும் விதமாக படிப்பை பற்றி பேசி பாக்யாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினார்.

அதன்பிறகு தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் ராதிகாவை விட 1000-க்கு அதிகமாக வாக்குகள் பெற்று பாக்யா வெற்றி பெற்றார். இதனால் கடுப்பான ராதிகா அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நேரத்தில் வெற்றி குறித்து மேடையில் பேசிய பாக்யா படிப்பு மட்டுமல்ல குடும்பத்தை நிர்வகிக்கும் திறமை இருந்தால் எதிலும் ஜெயித்துவிடாலம் என்று கூறியிருந்தார்.

Advertisment
Advertisements

இதை கேட்டு கோபமாக வீட்டுக்கு வரும் ராதிகா கோபியிடம் சண்டை போட்டுவிட்டு, பாக்யா இப்படி பேசுவாங்கனு நினைக்கல இனிமேல் நான் யார் என்று காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். இன்றைய எபிசோட்டில், ஆபீஸ் கேண்டீன் கான்ட்ராக்ட்டுக்காக ராதிகாவின் ஆபீஸ்க்கு எழிலுடன் வருகிறார் பாக்யா. அப்போது பாக்யா குறித்து நல்ல பெயர் இல்லை இந்த கான்ட்ராக்ட் அவரிடம் கொடுக்க வேண்டாம் என்று ராதிகா எம்.டி.யிடம் சொல்லிவிடுகிறார்.

இதை கேட்டு எம்.டி பாக்யாவிடம் இந்த கான்ட்ராக்ட் உங்களிடம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிடுகிறார். இதை கேட்டு ஷாக் ஆகும் பாக்யா இதற்காக நான் நிறைய செலவு செய்தவிட்டேன் சார் இப்போ இல்ல அப்டீனா எப்படி என்று கேட்க, அவர் ஒரே வார்த்தையாக கான்ட்ராக்ட் இல்லை என்று சொல்லிவட்டு கிளம்பிவிடுகிறார்.

அதன்பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் கிளம்பும் பாக்யாவை ராதிகா கூப்பிடுகிறார். இந்த கான்ட்ராக்டை உங்களுக்கு தரக்கூடாதுனு நான்தான் சொன்ன. அன்னைக்கு காலணி எலக்ஷன்ல என்ன பேச்சு பேசுனீங்க. படிப்பெல்லாம் ஒரு விஷயமே இல்லனு. இப்போ சொல்ல படிப்புதான் எல்லாத்தையும் தீர்மானிக்குது. அதுதான் நம்மல மேல கொண்டுபோய் வைக்கும். இந்த இடம் என் இடம் அதன் ஒரே வார்த்தையில ஒங்க கான்ட்ராக்டை கேன்சல் பண்ணீட்டேன் என்று சொல்கிறார்.

இதை கேட்டு பாக்யா அதிர்ச்சியில் நிற்க எழில் அவரை அழைத்துக்கொண்டு கிளம்புகிறார். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: