Advertisment

பெயரை மாற்றிய பாக்யா... அதிர்ச்சியில் கோபி - ராதிகா... அடுத்து என்ன நடக்குமோ!

தற்போது வீட்டிற்காக 18 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துவிட்ட பாக்யா கோபி ராதிகா இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்.

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியல் ப்ரமோ

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் கோபியின் வீடு தற்போது பாக்யா பெயருக்கு மாறி இந்த வீட்டில் பாக்யலட்சுமி இல்லம் என்று போர்டு வைக்கப்பட்டுள்ளது கோபிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Advertisment

தமிழ் சின்னத்திரையின் முன்னணி சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் தினசரி எப்சோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், சமீப வாரங்களாக பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கிறது. தனது மாமியார் ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன ராதிகா மற்றும் கோபியிடம் ஒரு மாதத்தில் இந்த வீட்டிற்கான பணத்தை கொடுப்பதாக சவால் விட்டிருந்தார் பாக்யா.

அதன்படி தற்போது வீட்டிற்காக 18 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துவிட்ட பாக்யா கோபி ராதிகா இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். இதனால் விரக்தியில் இருக்கும் கோபி பாக்யாவை பழிக்கு வழி வாங்குவேன் என்று சபதம் எடுத்துக்கொண்டிருக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

இதில் பணத்தை கொடுத்துவிட்ட பாக்யா வீட்டை தனது பெயருக்கு மாற்ற ரிஜிஸ்டர் ஆபீஸ் செல்கிறார். அங்கு தயக்கத்துடன் பாக்யா பெயருக்கு வீட்டை மாற்றி கொடுக்கும் கோபியிடம், இனி அந்த வீட்டுக்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லிவிட்டு வருகிறார் எழில். அதனைத் தொடர்ந்து வீட்டில் கோபிநாத் இல்லம் என்று இருந்த போர்டை அகற்றிவிட்டு பாக்கியலட்சுமி இல்லம் என்று மாற்றியுள்ளனர்.

அப்போது அந்த வழியாக வரும் கோபி இதை பார்த்து ஷாக் ஆக அத்துடன் ப்ரமோ முடிவடைந்துவிடுகிறது. ஏற்கனவே கோபிநாத் என்ற பெயரை எடுத்ததனால் வந்த சண்டையில் தான் கோபி ராதிகா இருவரும் இங்கு வந்து தங்கியிருந்த நிலையில், தற்போது பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டை எழுதி கொடுத்துவிட்டதால் தனது பெயரை மாற்றிவிட்டார்கள் என்று கோபி கோபமாகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Cinema Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment