விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள மத்தியில் நாள்தோறும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இனியா என்ன படிக்க வேண்டும் எனபது குறித்து பாக்யா கோபி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Advertisment
எளிமையான ஒரு குடும்ப தலைவியின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், கடந்த பல மாதங்களாக இந்த சீரியலின் தினசரி எபிசோடுகள் பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கிறது.
பாக்யா சமையலில் சாதித்தது, கோபிக்கு 18 லட்சம் பணம் கொடுத்து வீட்டை மீட்டது, ஈஸ்வரியிடம் நல்ல பெயர் கிடைத்தது என பரபரப்பாக சென்ற இந்த சீரியலில் கோபியின் வாழ்க்கை எங்கு போய் முடியுமோ என்ற கேள்வி ரசிகர்கள் மனத்தில் தொற்றிக்கொண்டது. அதே சமயம் கோபி ராதிகா இருவருக்கும் இடையேயான காட்சிகள் சிரிப்பலையை ஏற்படுத்தவும் தவறியதில்லை.
இதனிடையே தற்போது இனியா ஸ்கூலில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதற்காக வைத்த பாராட்டு விழாவில், பாக்யா கலந்துகொள்ள முடியாத நிலையில், ராதிகாவும் கோபியும் இனியாவுக்கு அப்பா அம்மாவாக இருந்து பார்த்துக்கொண்டனர். இது இனியாவுக்கு ஒரு பக்கம் பிடிக்கவில்லை என்றாலும் பாக்யா வரவில்லை என்பதால் அவர் மீதும் கோபத்தில் இருந்தார்.
Advertisment
Advertisements
இறுதியாக பாக்யா வந்துவிட்ட நிலையில், உனக்கு என்னை விட உன் சமையல் தான் முக்கியம் என்று சொல்லி இனியா கோபித்துக்கொண்டு போக அதன்பிறகு சமையல் செய்யும் இடத்தில் நடந்ததை சொல்லி பாக்யா இனியாவுக்கு புரிய வைக்கறார். இனியாவும் அதை புரிந்துகொண்ட நிலையில், பாக்யா உனக்கு என்ன தோனுதோ அதை படி, ஆனால் என் வாழ்க்கைக்கு உதவியாக இருக்க வேண்டும். நான் செல்ல வேண்டும் என்று நினைத்த உயரத்தை நீ அடைய வேண்டும் என்று இனியாவுக்கு சொல்கிறார். அதற்கு இனியாவும் ஓகே சொல்கிறார்.
இதனிடையே தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், கோபி இனியாவை பிபிஎம் சேர்த்துவிட அப்ளிக்கேஷன் ஃபார்ம் வாங்கிக்கொண்டு வருகிறார். இதை சற்றும் எதிர்பாராத எழில் இனியா விஸ்காம் தான் படிக்க போகிறார் என்று சொல்கிறார். அதற்கு கோபி இனியா மீடியா ஃபீல்டு உனக்கு செட் ஆகாது என்று சொல்ல, இல்ல டாடி நான் விஸ்காமே படிக்கிறேன் என்று இனியா சொல்கிறார். ஆனால் அதை புரிந்துகொள்ளாத கோபி மீண்டும் இனியாவை ப்ரைன்வாஷ் செய்கிறார்.
இதை பார்த்து பாக்யா இனியா விஸ்காம் படிக்க முடிவு செய்துவிட்டதாக சொல்ல, இனியா நான் சொல்வதை தான் படிக்க வேண்டும் என்று கோபி சொலல், அவள் யார் சொல்வதையும் படிக்க வேண்டாம். அவர் விருப்பத்திற்கு படிக்க வேண்டும் என்று பாக்யா சொல்கிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இந்த குடும்பத்தில் பிரச்னை வரும்போதெல்லாம் அதற்கு இனியாதான் காரணமாக இருக்கார் என்று கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”