விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தனது முன்னாள் மனைவி பாக்யாவின் முன்னேற்றத்தை பார்த்து பொறாமை படும் கோபியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
Advertisment
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முகப்கிய இடத்தை பெற்று வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. பாக்யா கோபி ராதிகா இந்த 3 கேரக்டர்களை சுற்றியே திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் தனது மனைவி பாக்யாவை பிரிந்த கோபி, ராதிகாவை திருமணம் செய்துகொண்டார்.
மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று அசைப்பட்ட கோபிக்கு 2-வது வாழ்க்கை துயரமாக அமைந்த நிலையில், தான் இல்லை என்றால் பாக்யா இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்த கோபிக்கு இப்போது அவரின் முன்னேற்றம் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஆனாலும் தனது வாழ்க்கையும் பாக்யாவின் வாழ்க்கையையும் நினைத்து புலம்பும் கோபியின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இதனிடையே தற்போது இனியா பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்துள்ள நிலையில், பேங்க் லோன் வாங்க வேண்டும் என்பதற்காக பாக்யாவும் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இதை கேள்விப்பட்ட தனியாக புலம்பி தவித்துக்கொணடிருக்கிறார். இது குறித்து ராதிகாவிடம் சொல்லும் கோபி, பாக்யா கல்லூரி போக விடாமல் தடுக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறார்.
Advertisment
Advertisements
இதற்காக பாக்யா படிக்கும் ஸ்போக்கன் இங்கிலீஷ் க்ளாகஸ்க்கு போகும் கோபிக்கு நெஞ்சுவலியை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கோபமாக அங்கே போகும்கோபி, பாக்யாவும் பழனிச்சாமியும் நின்று ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருப்பதை பார்க்கிறான். ஏற்கனவே இவர்கள் இருவரின் நட்பை சந்தேகத்துடன் பார்த்து வரும் கொபி, இதை பார்த்து மீண்டும் கடுப்பாகிறார். இதனிடையே உரையாடலின்போது பாக்கியாவை தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் அவரது சிரிப்பு மிகவும் அழகாக இருப்பதாகவும் பழனிச்சாமி ஆங்கிலத்தில் கூறுகிறார்.
இதை பார்த்து கோபி ஷாக் ஆக அடுத்து பாக்கியாவிடம் ஐ லவ் யூ என்றும் சொல்லி விடுவிகிறார் பழனிச்சாமி. இதைப் பார்க்கும் கோபி அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்ந்துவிடுகிறார். இந்த ப்ரமோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பழனிச்சாமியின் இந்த பேச்சு பாக்கியாவிற்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“