Baakiyalakshmi Serial Promo : இல்லத்தரசிகளின் உண்மை முகத்தை காட்டும் சீரியல் எது என்று கேட்டால் பலரும் சொல்லும் ஒரே சீரியல் பாக்கியலட்சுமி. விஜய் டிவியில் ப்ரைம் டைமில ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வீட்டில் இருக்கும் திருமணமான ஒரு பெண் தனது வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கடுமையாக உழைப்பது குடும்பத்தில் உள்ள அனைவரையும் அன்பாக கவனித்தக்கொள்வது என பாக்யலட்சுமி பல குடும்பங்களின் இல்லத்தரசியாக இருந்து வருகிறார்.
இந்த சீரியலில் பாக்யாவின் கணவர் கோபி தனது வீட்டிற்கு தெரியாமல், பள்ளி தோழி ராதிகாவுடன் நெருங்கி பழகி வருகிறார். பல நாட்களாக தொடர்ந்து வரும் இந்த பழக்கத்தை முதலில் பாக்யாவின் இளையமகன் எழில் பார்த்து விடுகிறார். ஆனாலும் இதை எப்படியோ சமாளித்து கோபி தப்பி விடும் நிலையில், அடுத்து வீட்டு வேலைக்காரி செல்வி ஜவுளிக்கடையில் ராதிகாவுடன் இருக்கும்போது பார்த்துவிடுகிறார். ஆனால் செல்வி சொல்வதை பாக்யா நம்பாததால், கோபி அப்போவும் தப்பி விடுகிறார்.
இதனால் ரசிகர்கள் பலரும் கோபி எப்போது வீட்டில் மாட்டுவார் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், பாக்யலட்சுமி சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. இந்த ப்மோவில் ராதிகாவுடன் கோவிலில் இருக்கும் கோபி அவளுக்கு பொட்டு வைத்து விடுகிறார். இதனை கோவிலுக்கு வரும் கோபியின் அப்பா பார்த்து அதிர்ச்சியடையும்போது, மயூ கோபியை கட்டிப்பிடித்துக்கொள்கிறாள். இதை பார்த்து கோபியின் அப்பா மேலும் ஷாக் ஆக அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
பரபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் புரொமோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. ஆனால் இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கோபி இப்போதும் தப்பித்து விடுவார் என்றும், அவரது அப்பா இதை வீட்டில் சொல்லமாட்டார் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும ஒரு ரசிகர் எத்தனை சீரியலில் பார்க்கிறோம் இதெல்லாம் ஒரு கனவு என்று முடித்துவிடுவார்கள் என்று கூறியுள்ளார். ஆனாலும் ரசிகர்கள் பலரும் இந்த எபிசோடுக்காக வெயிட் செய்வதாக கூறியுள்ளனர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil