வில்லனிடம் ஐக்கியம் ஆன கோபி: பாக்யா ரெஸ்டாரண்ட்க்கு ஆபத்து; இனியா திருமணம் நடக்குமா?

பாக்கியலட்சுமி சீரியலில், கோபி வில்லனிடம் ஐக்கியம் ஆக, இனியாவின் திருமணத்தில் மேலும் சிக்கல் எழுந்துள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலில், கோபி வில்லனிடம் ஐக்கியம் ஆக, இனியாவின் திருமணத்தில் மேலும் சிக்கல் எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Iniya Baakiya

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில், ஒரு பக்கம் இனியாவின் காதல் விவகாரம் கோபிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த பக்கம், பாக்யாவின் ரெஸ்டாரண்ட்டை விலைக்கு கேட்டு, டார்ச்சர் செய்கிறார்கள். தற்போது கோபி வில்லன் பக்கம் சாய்ந்துள்ளார்.

Advertisment

இல்லத்தரசியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலில், கணவனை விவாகரத்து செய்த மனைவி, தனது குடும்பத்தை எப்படி முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்கிறார்? கணவரின் பொறாமையால் வரும் பிரச்னைகளை எப்படி சமாளித்தார் என்பது குறித்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் சமீப காலமாக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்த விமர்சனங்களுக்கு முக்கிய காரணம், பாக்யாவின் மகள் இனியாவின் காதல் விவகாரம் தான். பாக்யா நல்லபடியாக இருந்தாலும், அவரின் மகள் எதாவது ஒரு பிரச்னையில் சிக்கி வருகிறார். அந்த வகையில் தான் தற்போது தனது வீ்ட்டில் வேலை செய்யும் செல்வியின் மகள் ஆகாஷை காதலிக்கிறார். இந்த காதல் விவாகரத்தை கண்டுபிடித்த கோபி, அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்கிறார். பெண் பார்க்க வரும் நாளில் இனியா போலீஸ்க்கு போன் செய்துவிடுகிறாள்.

நிச்சயதார்த்தம் நடக்கும்போது போலீஸ் என்ட்ரி கொடுத்து அதை தடுத்துவிடுகிறது. அதன்பிறகு இனியா வேலைக்கு சேர்த்துவிட, வீட்டில் கோபியும் ஈஸ்வரியும் அவளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். இந்த நேரத்தில் பாக்யாவின் ரெஸ்டாரண்டை ஒருவர் விலைக்கு கேட்க, பாக்யா இது என் அடையாளம் விலைக்கு கொடுக்க முடியாது என்று சொல்லிவிடுகிறார். ஆனாலும் அந்த நபர் வீட்டுக்கே வந்து மிரட்டிவிட்டு போகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

இதனிடையே, அடுத்த வாரத்திற்கான ப்ரமோ வெளியாகியுள்ளது, இதில் பாக்யாவின் ரெஸ்டாரண்டை விலைக்கு கேட்டவர், கோபியை அழைத்து உங்கள் மகள் இனியாவை எனது மகனுக்கு திருமணம் செய்ய ஒப்புக்கொள்வதாக சொல்ல, கோபியும் மகிழ்ச்சியாக அதை ஏற்றுக்கொள்கிறான். அந்த விஷயத்தை வீட்டில் வந்து சொல், ஈஸ்வரி மகிழ்ச்சியாகிறாள். ஆனால் பாக்யா, இனியா ஒருநாளும் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டாள் என்று சொல்ல, யார் என்ன சொன்னாலும் இந்த கல்யாணம் நடக்கும் என்று ஈஸ்வரி சவால் விடுகிறாள். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. 

Baakiyalakshmi Serial tamil serial Actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: