பாக்யாவை வீட்டை விட்டு வெளியேற்றும் முயற்சியில் தோல்வியடைந்த கோபி தற்போது வீட்டை விட்டு வெளியேறிய நிலையில். ராதிகாவும் தனது வீட்டில் இடம் தர மறுத்துவிட்டார். இதனால் கோபியின் அடுத்த நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தால என்னென்ன நடக்கும் என்பதையும் ஒரு குடும்ப தலைவி தன் வாழக்கையில் சந்திக்கும் பிரச்சினைகளையும் மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும சீரியல் பாக்கியலட்சுமி.
கோபி பாக்யா தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் கோபி பாக்யாவின் நெருங்கிய தோழியும் தனது முன்னாள் காதலியுமான ராதிகாவுடன் திருமணத்திற்கு தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்த விஷயங்களை எதுவும் தெரியாத பாக்யா கணவர் சொல்வதை எல்லாம் கேட்டு நடந்துகொள்கிறார்.
சமீபத்தில் கோபி ராதிகாவுடன் பழகி வரும் உண்மையை தெரிந்துகொண்ட பாக்யா, கோபிக்கு விவாகரத்து கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். ஆனால் வீட்டை கட்டிய 40 லட்சம் பணத்தை கேட்ட கோபிக்கு அதையும் தானே தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார் பாக்யா.
கோபி வீட்டை விட்டு வெளியேறினாலும், ஈஸ்வரி, செழியன், இனியா என மூவரும் கோபிக்கு ஆதரவாகவும், எழில் தாத்தா ஜெனி ஆகிய மூவரும் பாக்யாவுக்கு ஆதரவாகவும் உள்ளனர். அதேபோல் கோபி வீட்டை விட்டு போவதற்கு முன்னாள் எப்படி இருந்ததோ அதில் துளியும் மாற்றம் இல்லாமல் உள்ளது. கோபி நல்லவர் போலவும் பாக்யாதான் தப்பு செய்தது போலவும் கதை நகர்ந்துகொண்டிருக்கிறது.
இதனிடையே அடுத்த வாரத்திற்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாக்யாவின் கணவன் என்பதால் கோபியை வெறுக்கும் ராதிகா, அவரை வீட்டிற்குள் சேர்க்கவில்லை. ஆனால் கோபி ராதிகாவுடன் சேர தனது விடா முயற்சியை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறார்.
இந்த முயற்சியின் பலனாக பள்ளிக்கு வரும் ராதிகாவிடம் கோபி கையை பிடித்துக்கொண்டு ப்ளீஸ் ராதிகா நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்கிறார் இதை கேட்டு ராதிக அமைதியாக இருக்க அப்போது அந்த வழியாக வரும் பாக்யா அதை பார்த்துவிடுகிறார். இவர் இன்னும் திருந்தலையா என்று கேட்பது போன்று பார்க்கிறார் அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இதனால் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“