விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி அனுப்பிய ஆள், பாக்யாவின் ஹோட்டலில் செய்த குளறுபடியால், ரெஸ்டாரண்ட் சீல் வைக்கப்பட்ட நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ரெஸ்டாரண்ட்க்கு சீல் வைக்கப்பட்டதால் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் பாக்யா, வீட்டில் அமர்ந்து கணக்கு பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்போது இனியாக நான் எதாவது உதவி செய்யட்டுமா அம்மா என்று கேட்க, வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பாக்யா சொல்கிறாள். அதன்பிறகு இந்த நிலை சரியாகிவிடுவமா என்று இனியா கேட்க, நிச்சயம் சரியாகிவிடும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பாக்யா சொல்கிறாள்.
அதன்பிறகு, பாக்யா தனது ரூமில் இருந்து வெளியில் வர, ஈஸ்வரி, தனியாக அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறார். ஏன் அத்தை இன்னும் தூங்கலையா என்று பாக்யா கேட்க, இப்போ நடக்கிற எல்லா பிரச்னைக்கும் நான் தான் காரணம். நான் வந்து ரெஸ்டாரண்ட்டை ஓபன் செய்து வைத்திருக்கவே கூடாது என்னை மன்னித்துவிடு பாக்யா. நான் எல்லோரையும் ராசி இல்லாதவர் என்று சொன்னேன். ஆனால் இப்போது நானே ராசி இல்லாதவள் ஆகிவிட்டேன் என்று சொல்கிறார்.
இதை கேட்ட பாக்யா, அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை நீங்க போய் படுங்க என்று சொல்கிறாள். மேலும் உங்களுக்கும் இந்த பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஈஸ்வரியை சமாதாப்படுத்துகிறாள். மறுநாள் காலை, பாக்யா செல்வியுடன் வாக்கிங் போக, எல்லோரும் ரெஸ்டாரண்ட் பற்றி கேட்கின்றனர். அதற்கு செல்வி பதிலடி கொடுத்து வரும் நிலையில், அப்போது போகி வந்து நிற்கிறார். பணக்காரர் ஆகனும்னு கனவு கண்டால் மட்டும் போதாது அதை நடத்தி காட்ட வேண்டும் என்று சொல்கிறார்.
பாக்யாவுக்கு ஆதரவாக செல்வி பேச, நீ ஒரு முட்டாள், இவ ஒரு பெரிய முட்டாள். ரெண்டு முட்டாளும் சேர்ந்தால் எப்படி இருக்கும சொல்லுங்க என்று சொல்ல, வார்த்தையை அளந்து பேசுங்க என்று பாக்யா கடுப்பாகிறாள். ரெஸ்டாரண்ட் ஓபன் பண்ணி பிஸினஸ் பண்ணலாம்னு பார்த்தே இப்போ திரும்பவும் மசாலா விற்பனை செய்ய போ என்று கோபி நக்கலடிக்க, நீங்க எதெல்லாம் பண்ண முடியாதுனு சொன்னீங்களே அதெல்லாம் நான் பண்ணுவேன். நான் சாதிப்பேன் என்று பாக்யா சவால் விட, இதை கண்டுகொள்ளாத கோபி, உன்னால எதுவும் பண்ண முடியாது திரும்பவும் அடுப்படிக்கே போ என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
அதன்பிறகு வீட்டுக்கு வரும் பாக்யா நடந்த விஷயங்களை நினைத்து, கோபத்தில் இருக்க, செல்வி, ரெஸ்டாரண்ட் கரண்ட் பில் கட்ட வேண்டும் என்று சொல்கிறாள். இதையும் அபராதத்தையும் சேர்த்தால், ஒரு லட்சம் வந்துவிடுமே என்று பாக்யா யோசிக்க, அப்போது அங்கு வரும் ஜெனியின் அம்மா மரியம், ஜெனி கர்ப்பமானதில் இருந்து எதுவும் சரியில்லை என்று சொல்ல, ஈஸ்வரி பாக்யா இருவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்க அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.