தனியாக நிற்கும் கண்ணனிடம் ஏன் இங்க வந்ததுல இருந்து டல்லா இருக்கீங்க என இனியா கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லை. இது இன்னொருத்தவங்க வீடு அதான் என்று கண்ணன் சொல்லும்போது, ங்கு வரும் ஐஸ்வர்யா, ஏன் நான் இங்க வந்ததுல இருந்து என்னை கண்டுக்கவே மாட்ற என கேட்கிறாள். அதற்கு கண்ணன் அப்படிலாம் எதுவும் இல்லை என சொல்லிவிட்டு செல்கிறான்
இதற்கிடையே தனம், முல்லை அனைவரிடமும் பிரசாந்த் ஐஸ்வர்யா நிச்சயார்த்தம் முடிச்சுட்டு போகலாம் என மல்லி சொல்கின்றனர். அதற்கு தனம் ஏன் அவசரமா பண்ணனும், குன்னக்குடில இருந்து எல்லாரும் வர வேண்டாமா? என கேட்க, எனக்கு அண்ணன் இருந்து பண்றது சந்தோஷமா இருக்கு நீ ஒரு வார்த்தை மூர்த்தி மாமாகிட்ட பேசி பாரு என சொல்கிறாள். அதற்கு அவளும் சம்மதம் சொல்கிறாள்.
இந்நிலையில், மூர்த்தி, ஜீவா, கதிர் மூவரும் கார் வாங்குவதற்கு வேறொரு டீலரை பார்த்து பேசுகின்றனர். அவர் பெரிய கார் வாங்குவதற்கு அதிக விலை சொல்லவும், என்னான்னு கலந்து பேசி சொல்றோம் என கூறிவிட்டு கிளம்புகின்றனர். இதற்கடையே கோபி அண்ணன் தான் நிச்சயதார்தத்தை வைக்க ஐடியா கொடுத்தாங்க என பாக்யா முல்லையிடம் மல்லி சொல்கிறாள். இதை கேட்டு ஷாக் ஆகும் பாக்யா கடந்த முறை குன்னக்குடி வந்தபோது கோபியின் நடவடிக்கை குறித்து சொல்கிறாள். அப்போது அங்கு வரும் பிரசாந்த்டம் வெள்ளிக்கிழமை நிச்சயார்த்தம் வைத்திருப்பதை பற்றி சொல்கின்றனர்.
இதற்கிடையே உனக்கு ஐஸ்வர்யா கிட்ட என்ன தம்பி பிடிச்சது என கஸ்தூரி கேட்க, அவளுக்கும் என்னை மாதிரி அம்மா, அப்பா இல்லை. அதான் கடைசி வரை அவளை நல்லா பார்த்துக்கணும் தோணுச்சு என சொல்கிறான். இதற்கிடையில் கோபியிடம் பேசிக்கொண்டிருக்கும் ஈஸ்வரி இன்னைக்கு ஊருக்கு கிளம்பலாம்ன்னு பார்த்தா, நிச்சயம் வேற வைச்சு இருக்காங்க. உன் அப்பாவை வேற சென்னை போக சொல்லிட்டேன். அவர் தனியா இருப்பாருடா என சொல்கிறாள்.
அப்போது பாக்யாவும் நம்ம ராதிகா வீட்டு கிரஹபிரவேசத்துக்கு நம்ம போக முடியாதா என கேட்க, ராதிகா உன்னோட பிரெண்ட் தான். இவுங்க நமக்கு சொந்தம்ல. ரெண்டு நாள் தான இருக்கு. முடிச்சு கொடுத்துட்டு போகலாம் என கோபி சொல்கிறான். ஆனால் கோபியிடன் நடவடிக்கைகளை பார்த்து சந்தேகப்படும் எழில் எந்த சொந்தத்து கூடவும் நெருங்கி பழகாத நீங்க. இப்போ எப்படி அப்பா அப்படியே மாறி இருக்கீங்க என கேட்கிறான். இதற்கு என்ன சொல்வது என்று தெரியாத கோபி, இன்னும் ரெண்டு நாள் தான நிச்சயம் முடிஞ்ச மறுநாள் கிளம்பிடலாம் என சொல்கிறான்.
அதற்கு பாக்யா, நீங்க நெஜமாவே மாறுனா எனக்கு சந்தோசம் தான் என சொல்கிறான். ஆனால் சந்தேகத்தில் உச்சத்தில் இருக்கும் எழில், அனைவரும் சென்ற பிறகு, இவர் உண்மைய சொல்றாரா? இல்லை நடிக்கிறாரா? இவர் அப்படி உண்மைய சொல்லக்கூடிய ஆள் இல்லையே என யோசிக்கிறான் இதற்கிடையில் பிரசாந்த், ஐஸ்வர்யாவிடம் வந்து பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு வரும், இனியாவும், ஜெனியும் அவர்களை கிண்டல் செய்கின்றனர்.
இதெல்லாம் பிடிக்காத ஐஸ்வர்யா, தேவையில்லாம இந்த பிரசாந்த் நம்மகிட்ட வழிஞ்சு பேசி, எல்லாரும் நம்மளை கலாய்க்கிறாங்க என யோசிக்கிறாள். இதனிடையில் தனத்திற்கு ஜுஸ் போட்டு கொடுகிறாள் பாக்யா. நீங்க ஏன் இந்த வேலையெல்லாம் பார்க்குறீங்க என அண்ணி என தனம் கேட்கும் போது, நீ இப்போ ஒரு ஆள் இல்லை என சொல்கிறாள். அதன்பிறகு தனத்தின் வளைகாப்பு பாக்யா கேட்க, வீட்ல இருக்க ஆளுங்களை விட்டுட்டு எனக்கும் அம்மா வீட்டு போக இஷ்டமத் இல்லை என்று தனம் சொல்ல அவளை ஆச்சரியமாக பார்க்கிறாள் பாக்யா. அத்துடன் முடிந்தது இன்றைய எபிசோடு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil